நடிகை ரம்யா பாண்டியன்,  இயக்குனர் ராஜுமுருகன் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்கிய 'ஜோக்கர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.  இந்த படத்தை அடுத்து நடிகர் சமுத்திரகனிக்கு ஜோடியாக 'ஆண்தேவதை' படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

சமீப காலமாகவே மிகவும் ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சென்சேஷனல் நாயகியாக இருந்து வரும் ரம்யா பாண்டியன். வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் கலக்க துவங்கினார்.

அந்த வகையில்,  இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'குக் வித் கோமாளி' என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு, தன்னுடைய சமையல் திறமையை வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: ஒல்லி நடிகைக்கு திருமணமான நடிகருடன் காதலா? விரைவில் திருமணம் : கொளுத்தி போட்ட பிரபலம்!
 

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ரசிகர் ஒருவர் அடுத்து  நடிக்க உள்ள திரைப்படம், பற்றி கேட்ட கேள்விக்கு...  இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படங்களில் கமிட்டாகி உள்ளதாக ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில்  உருவாகும் இப்படங்கள் பற்றிய, மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.