பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா  ஆகிய படங்களில் நடித்திருந்த போதும், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இவர் இந்தியில் துணிச்சலாக படுகவர்ச்சி கேரக்டர்களில் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...!

வெப் சீரியஸ் ஒன்றில் படுக்கையறை காட்சிகளில் நடித்த ராதிகா ஆப்தேவிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இந்நிலையில் ஒரு படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தால், அதே போல நடிக்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டினார். இருந்தாலும், அம்மணி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாமே ஓவர் கிளாமர் ரகம் தான். 

இதையும் படிங்க: எல்லை மீறும் மீரா மிதுன்... இதுதான் முழுநேர வேலையேவா..? தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்...!

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள ராதிகா ஆப்தே,  ஹீரோயின்களுக்கு சினிமா பாதுகாப்பான தொழில் இல்லை என்று தெரிவித்துள்ளார். நல்ல படம் அமைந்தால், ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு நியாபகம் வைத்திருப்பார்கள், அந்த மாதிரி படங்கள் கிடைக்காவிட்டால் மறந்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அடேங்கப்பா... சூப்பர் ஸ்டார் படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட நயன்தாரா...!

மேலும் நான் சினிமாவுக்கு வந்து இதோட 12 வருஷம் ஆச்சு. நிறைய நல்ல கேரக்டர்களில் நடித்து சிறந்த நடிகைன்னு பெயர் வாங்கிட்டேன். ஆனாலும் தொழில் ரீதியாக எப்போதும் பயந்து கொண்டே தான் இருக்கிறேன். நாளை எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா? என்று நினைத்தாலே பக்குன்னு இருக்கு என்று கூறியுள்ளார்.