தர்பார் படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்தின் பேவரைட் ஹீரோவான சிறுத்தை சிவாவுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: ஓவரா சீன் போடாதீங்க கமல்... நீங்களும், ஷங்கரும் கூட விபத்துக்கு பொறுப்பு... லைகாவின் பளார் பதில்...!

யார் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எந்தவொரு தகவலையுமே படக்குழு வெளியிடவில்லை. மேலும், அனைத்தையுமே மிக ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. தற்போது, இந்தப் படத்தில் நயன்தாராவும் இணைந்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'விஸ்வாசம்' படத்தில் நாயகியாக நடித்தவர் நயன்தாரா. இதனால் அந்த சென்டிமென்ட்டை சிவா தொடர்கிறார் எனத் தெரிகிறது.

சூப்பர் ஸ்டாருடன் ஏற்கனவே 90-ஸ்களில் டூயட் பாடிய மீனா, குஷ்பு உடன் நயன்தாராவும் இணைந்துள்ளது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே செம்ம எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் 168 படத்தில் நயன்தாரா இதுவரை சினிமாவில் ஏற்று நடிக்காத கதாபாத்திரமான வக்கீல் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த நயன்தாரா பிகில், தர்பார் படம் மூலம் சற்றே சறுக்கினார். அதனால் பட வாய்ப்புகள் குறைந்ததாக தெரிகிறது. எனவே படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார், டூப்பீஸ், லிப் லாக் கூட ஓகே என தயாரிப்பாளர்களுக்கு தூதுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...!

ரஜினியுடன் நடித்த தர்பார் படத்திற்கு 5.5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அண்ணாத்த படத்தில் நடிக்க நயன் சம்பளத்தை குறைத்துக்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் அண்ணாத்த படத்திற்காக நயன்தாரா 10 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. இது முற்றிலும் பொய் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. அதேபோல் நயனும் தலைவருடன் நடிப்பதற்காக தனது சம்பளத்தில் 20 சதவீதத்தை குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.