எதிர்நீச்சல், இரும்புத்திரை, அரிமா நம்பி, ஆதித்யா வர்மா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல நடிகை பிரியா ஆனந்த். என்ன தான் முன்னணி நடிகைகள் படங்களில் கோடி, கோடியாய் கொட்டிக்கொடுத்து நடிக்க வைத்தாலும், விளம்பர படங்களில் நடிக்க தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் சில மணி நேர ஷூட்டிங்கிற்கு கிடைக்கும் பெரும் தொகையும், மக்களிடம் கிடைக்கும் ப்ரீ பப்ளிசிட்டியும் தான். 

இதையும் படிங்க: ஐ.டி.ரெய்டை பங்கமாக கலாய்த்த தல அஜித்... என்றோ நடந்ததை இன்று வைரலாக்கும் நெட்டிசன்கள்...!

அதனால் தான் விளம்பர படங்களில் நடிக்கவே  மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட சின்னத்திரை விளம்பர பிரேக்குகளில் தென்பட ஆரம்பித்துவிட்டார். எனவே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியா ஆனந்திடம் விளம்பர படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள நெத்தியடி பதில் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மருமகன் தனுஷ் போட்ட ட்வீட்டிற்கு மாமனார் ரஜினியை திட்டும் நெட்டிசன்கள்...!

அதில் கோடி, கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும் முகத்தை வெள்ளையாக்கும் அழகு சாதன க்ரீம் விளம்பரங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெள்ளையாக இருக்கும் பெண்களை அழைத்து வந்து, டல் மேக்கப் போட்டு, பிறகு மீண்டும் க்ரீம் போட்டதால் வெள்ளையாக மாறியது போல் காட்டுகின்றனர். அப்படி கொஞ்சம் கூட நியாயமே இல்லாத விளம்பர படங்களில் என்னால் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.