தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வியும், மனநிலையும் பாதிக்கப்படும் என்று பல மனநல ஆலோசகர்களும் கவலை தெரிவித்து வந்தனர். 

தொடர்ந்து இந்த பொதுத்தேர்வுக்கு எதிர்ப்புகள் வந்த நிலையில் நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று அதனை ரத்து செய்வதாகவும் தமிழக அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அர்ச்சனா கல்பாத்தியை சிக்கலில் மாட்டிவிட்ட விஜய் ரசிகர்கள்... ஏ.ஜி.எஸ். அலுவலகத்தை சுற்றி வளைத்த வரித்துறை அதிகாரிகள்...!

தனுஷ் தனது ட்வீட்டில், 5ஆம் மற்றும்  8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது .இது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்திலிருந்தும் , பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும் .வாழ்த்துக்கள்.. நன்றி... என்று பதிவிட்டுள்ளார். 

நல்ல எண்ணத்துடன் நன்றி தெரிவித்து தனுஷ் போட்ட ட்வீட்டிற்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை மாணவர்களின் கல்விக்காக குரல் கொடுத்து வரும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தனுஷிற்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். 

ஆனால் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிஏஏ சட்டம் குறித்து பக்கம், பக்கமாக பேசினார். 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. இதனால் கண்டான நெட்டிசன்கள் தங்களது கடுப்பை மொத்தமாக தனுஷின் ட்வீட்டில் இறக்கிவிட்டனர். 

இதையும் படிங்க: "மாஸ்டர்" படத்தில் வில்லனாக நடிப்பது ஏன்?.... மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஓபன் டாக்...!

ரஜினிக்கு தான் இதை பற்றி பேச நேரமில்லை, நீங்களாவது நன்றி தெரிவிச்சிங்களே என்றும், தனுஷை பார்த்து ரஜினி கத்துக்கனும் என்றும் நெட்டிசன்கள் தாறுமாறாக விளாசித்தள்ளியுள்ளனர். சூப்பர் ஸ்டார் பேசினாலும் பிரச்சனை, பேசாவிட்டாலும் பிரச்சனை என அடுத்தடுத்து சிக்கலாக உருவெடுக்கிறது.