நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை நேற்று இரவுடன் நிறைவடைந்தது. பிகில் படத்திற்காக வாங்கிய சம்பளம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், மனைவி சங்கீதா ஆகியோரிடம் ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினார். விஜய்க்கு சொந்தமான நீலாங்கரை, பனையூர், சாலிகிராமம் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. 

இதையும் படிங்க: முட்டிக்கையால் முகத்தை மூடிய விஜய்?... தளபதி ஃபேன்ஸுக்கு தல ரசிகர்கள் வைத்த ஆப்பு...!

இந்நிலையில் தனது வீட்டில் நடத்தப்பட்ட ஐ.டி.ரெய்டு குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு தல அஜித் கிண்டலாக சொன்ன டைலாக். தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: மருமகன் தனுஷ் போட்ட ட்வீட்டிற்கு மாமனார் ரஜினியை திட்டும் நெட்டிசன்கள்...!

வீட்டில் வைத்த பொருட்களில் பாதியை எங்கு வைத்தோம் என்பது தெரியாமல் இருந்தது. ஐ.டி.ரெய்டால் காணாமல் போன பொருட்கள் மீண்டும் கிடைத்துவிட்டன. அதனால் மகிழ்ச்சியாக உள்ளது. அதைத்தவிர எனக்கு எந்தவித அதிர்ச்சியும் இல்லை என்று கூறியிருந்தார். தற்போது விஜய் வீட்டில் ரெய்டு நடைபெற்ற நிலையில், அப்போது அஜித் அளித்த இந்த பேட்டி வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: "மடியில கனமில்ல... வழியில பயமில்ல"... ஐ.டி.ரெய்டை அடுத்து விஜய் செய்த காரியம்...!

இதேபோல் மற்றொரு பேட்டி ஒன்றில், வெற்றி பெற்றவர்கள் மீது வரிகளை விதிப்பதை விட, மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகளின் வீடுகளை சோதனையிட வேண்டும் என்றும், அதுவே நாட்டின் பிரச்சனைகளை தீர்த்துவிடும் என்றும் கூறியிருந்தார். அதையும் தல ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.