பிகில் படத்தை வைத்து ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் போட்ட ட்வீட்டுகள் விஜய்க்கு எதிராக ஐ.டி.ரெய்டை திருப்பி விட்டு, அவரை முகத்தை மூடிக்கொண்டு வரவைத்துள்ளது. நேற்று ஏஜிஎஸ் சினிமாஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் பிகில் படம் பற்றிய முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதில் விஜய்க்கு கொடுத்த சம்பளம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதைப்பார்த்த ஐ.டி. அதிகாரிகள் உடனடியாக சம்மனுடன் நெய்வேலி விரைத்தனர். அங்கு மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த விஜய்யிடம் மடக்கி, மடக்கி கேள்வி கேட்டுள்ளனர். ஏஜிஎஸ் ஆவணத்திற்கும் விஜய் சொன்ன பதிலுக்கும் ஒத்துப்போகாததால், சம்மனை கொடுத்து விஜய்யை உடனடியாக சென்னை அழைத்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க: அமைதியா இருக்குறவர சீண்டி அரசியல் பக்கம் திருப்பாதீங்க...விஜய்க்கு ஆதரவாக பொறிபறக்கும் ஃபேன்ஸ் கமெண்ட்ஸ்...!

அப்போது ஜாகுவார் காரில் வருவதாக கூறிய விஜய்யை  ஐ.டி. அதிகாரிகள் இல்ல, இல்ல நீங்க எங்ககூட இனோவா காரிலேயே வாங்க என கையோடு அழைத்துள்ளனர். அப்போது இரண்டு ஐ.டி. அதிகாரிகளின் நடுவே அமர்ந்த விஜய், நெய்வேலியில் இருந்து நேற்று இரவு 8.45 மணிக்கு சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். சென்னையில் விஜய் வீட்டின் முன்பு நின்றிருந்த கேமராமேன்கள் அவரை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது விஜய் தனது முழங்கையால் முகத்தை மூடியதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: விஜய் வீட்டில் விடிய, விடிய தொடரும் ஐ.டி. ரெய்டு.... 13 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை...!

அப்படி முழங்கையால் முகத்தை மூடுவது போன்ற போட்டோவை அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாக்கி வருகின்றனர். பிகில் 300 கோடி வசூல், 400 கோடி வசூலுன்னு கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க... மொத்தமா வச்சிட்டாங்கலா ஆப்பு என அஜித் ஃபேன்ஸ் நக்கலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நஷ்டஈடு கேட்டு மிரட்டுறாங்க... பாதுகாப்பு தாங்க... ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு....!

இதுபோதாது என்று #வரிஏய்ப்புவிஜய் என்ற ஹேஷ்டேக்கை கிரியேட் செய்துள்ள அஜித் ரசிகர்கள், இப்ப சண்டைக்கு வாங்க டா... என்ற பாணியில் விஜய் ரசிகர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் பாம்பு இருக்கா? இல்லையான்னு ரெய்டு வந்தது எல்லாம் மறந்துபோச்சான்னு பதிலுக்கு கலாய்த்துள்ளனர்.