ஏ.ஆர்.முருகதாஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆனது. 4வது நாளிலேயே தர்பார் திரைப்படம் ரூ.150 கோடி வரை வசூல் செய்ததாக லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்த போதும், தியேட்டரில் கூட்டம் சும்மா அள்ளுது என தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் தெரிவித்து வந்தனர். 

இதையும் படிங்க: விஜய் வீட்டில் விடிய, விடிய தொடரும் ஐ.டி. ரெய்டு.... 13 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை...!

ஆனால் தமிழகத்தின் சில மாவட்டங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் சிலர் தர்பார் படத்தை ரிலீஸ் செய்ததால் தங்களுக்கு பலத்த நஷ்டம் என குற்றச்சாட்டினர். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் வீட்டிற்கு படையெடுத்த விநியோகஸ்தர்கள், எப்படியாவது அவரை பார்த்து நஷ்டஈடு வாங்கித்தர கோரிக்கை வைக்க வேண்டுமென உறுதியாக இருந்தனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை விநியோகஸ்தர்களை சந்தித்ததாக தெரியவில்லை. 

இதையும் படிங்க: ஏஜிஎஸ் ஆபிஸில் சிக்கிய முக்கிய ஃபைல்?... விஜய்யிடம் விசாரணை நடத்த அதுதான் காரணமா?

இதையடுத்து லைகா அலுவலகத்திற்கும், ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகத்திற்கும் சென்ற விநியோகஸ்தர்கள் அங்கும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இயக்குநரைக்கூட நேரில் சந்தித்து பேச முடியாததால் விநியோகஸ்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே தர்பார் படத்திற்கு நஷ்டஈடு கேட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை மிரட்டுவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இதையும் படிங்க: அமைதியா இருக்குறவர சீண்டி அரசியல் பக்கம் திருப்பாதீங்க...விஜய்க்கு ஆதரவாக பொறிபறக்கும் ஃபேன்ஸ் கமெண்ட்ஸ்...!

அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ் தாக்கல் செய்த மனு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. விருகம்பாக்கம், தேனாம்பேட்டை காவல்நிலையங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் தேவை என தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.