நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த தளபதி விஜய்யை அலேக்காக அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய, விடிய வீட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய்க்கு சொந்தமான சாலிகிராமம், பனையூர், நீலாங்கரை வீடுகளில் இரண்டாவது நாளாக அதிரடி ரெய்டு நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: விஜய் வீட்டில் விடிய, விடிய தொடரும் ஐ.டி. ரெய்டு.... 13 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை...!

இதனால் உச்சகட்ட கொதிநிலையில் உள்ள விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக டுவிட்டரில் பல ஹேஷ்டேக்குகளை கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சிலரோ அரசியல் உள்நோக்கத்துடன் விஜய் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் டுவிட்டரில் குமுறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏஜிஎஸ் ஆபிஸில் சிக்கிய முக்கிய ஃபைல்?... விஜய்யிடம் விசாரணை நடத்த அதுதான் காரணமா?

#ThalapathyVijay #ITRaid போன்ற ஹேஷ்டேக்குகளில் விஜய் பட வசனத்தை வைத்து ஐ.டி. ரெய்டுக்கு அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதில் ஐடி ரெய்டு ஹேஷ்டேக் செம்ம ட்ரெண்டாகி வருகிறது. விஜய்யின் மெர்சல் பட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு, அரசியல் காரணங்களுக்காக ரெய்டு நடத்தப்படுவதாக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 

இதையும் படிங்க: விஜய் அப்பாவையும் விட்டு வைக்காத வருமான வரித்துறை... எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 3 மணி நேரம் கிடுக்குபிடி விசாரணை...!

அதனால் சிவனேனு அவர் சினிமாவில் இருக்கார் அவரை சீண்டி அரசியல் பக்கம் திருப்ப வேண்டாம் என எச்சரிக்கும் தொனியிலும் விஜய் ரசிகர்கள் சிலர் ட்வீட் செய்து வருகின்றனர்.