காலை முதலே அடுக்கடுக்காய் தொடர்ந்து வரும் ஐ.டி. ரெய்டு, தளபதி விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரையும் விட்டுவைக்கவில்லை.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி, சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல், வழக்கம் போல் படப்பிடிப்பு பணிகள் சுமூகமாக நடைபெற்று வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணமாக, வருமானவரித்துறை அதிகாரிகள், திடீர் என 'மாஸ்டர்' பட படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தனர்.
இதைத்தொடர்ந்து, வருமானவரித்துறையினர் நேரடியாக நடிகர் விஜய்க்கு சம்மன் வழங்கிய போலீஸார், விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மேற்படி விசாரணைக்காக விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது காரிலேயே சென்னை அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
காலை முதலே "பிகில்" பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், தயாரிப்பாளர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி சினிமா பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அர்ச்சனா கல்பாத்தியை சிக்கலில் மாட்டிவிட்ட விஜய் ரசிகர்கள்... ஏ.ஜி.எஸ். அலுவலகத்தை சுற்றி வளைத்த வருமான வரித்துறை அதிகாரிகள்...
இந்நிலையில் காலை முதலே அடுக்கடுக்காய் தொடர்ந்து வரும் ஐ.டி. ரெய்டு, தளபதி விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரையும் விட்டுவைக்கவில்லை. சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் பழைய வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். இப்போது அங்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 5, 2020, 5:39 PM IST