கோலிவுட்டையே கடந்த 2 நாட்களாக பரபரப்பாக வைத்திருந்த சம்பவம் பிகில் படம் தொடர்பாக நடைபெற்ற வருமான வரிச்சோதனை தான். பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏசிஎஸ் சினிமாஸ், அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்த பிரபல பைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்கள் உட்பட 38 இடங்களில் சோதனை நடைபெற்றது. 

இதையும் படிங்க: நடிகர் விஜய்யை துருவி, துருவி விசாரிப்பது ஏன்?... விளக்கமளித்த வருமான வரித்துறை...!

மாஸ்டர் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்த நெய்வேலிக்கே சென்று நடிகர் விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து வந்தது, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜய் வீட்டில் என்ன  நடக்கிறது என்ற அப்டேட்டை தெரிந்துகொள்ள அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையுடன் காத்திருந்தனர். இதனிடையே விஜய்க்கு சொந்தமான வீடுகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா... 300 கோடி வரி ஏய்ப்பா?... ஐ.டி.ரெய்டில் வெளியான பகீர் தகவல்...!

பிகில் படத்திற்காக பெறப்பட்ட சம்பளம் தொடர்பாக விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவரது வீட்டில் இருந்து பணமோ, ஆவணமோ சிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று விஜய் இல்லாத காட்சிகளை மாஸ்டர் படக்குழு ஷூட் செய்து வருவதாக தகவல்கள் வெளியான. 

இதனிடையே, இன்று நெய்வேலியில் நடைபெற்று வரும் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் என்.எல்.சி. இரண்டாவது சுரங்க பகுதியில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.