பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'நாகினி' சீரியல் மூலம், இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை, அனைவரையும் கவர்ந்தவர் பாலிவுட் நடிகை மௌனிராய்.

மேலும் செய்திகள்: 60 ஆவது பிறந்தநாள்... சமூக வலைத்தளத்தை கலக்கும் மோகன்லால் ஸ்டைலிஷ் போட்டோஸ்!
 

இவர், விளம்பர படத்தில் நடிப்பதற்காக நான்கு நாட்கள் வெளிநாடு சென்றபோது, எதிர்பாராத விதமாக அணைத்து விமான சேவைகளுக்கு நிறுத்தப்பட்டதால், இந்தியாவிற்கு திரும்பமுடியாமல் கடந்த 2 மாதமாக வெளிநாட்டிலேயே சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு, 'ரன்' என்கிற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மௌனிராய். இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து நடித்த சில பஞ்சாபி மொழி படங்களும் தோல்வியடைந்ததால், சீரியல் பக்கம் இவருடைய கவனம் சென்றது.

மேலும் செய்திகள்: ஊரடங்கு ஓய்வு... கையில் மண்வெட்டியை பிடித்து விவசாயத்தில் இறங்கிய இளம் ஹீரோ..!
 

பின் முழு நேர சீரியல் நடிகையாக மாறிய மௌனிராய், சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து, இவர் கடந்த 2015 - 2016 , 2016 - 2017 ஆகிய வருடங்களில் நடித்த நாகினி 1 , மற்றும் நாகினி 2 ஆகிய சீரியல்கள் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதை தொடந்து தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதிலும் பிஸியாக இருக்கிறார் மௌனிராய். இந்நிலையில் இவர் கடந்த மார்ச் மாதம் விளம்பர படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அபுதாபி சென்றுள்ளார். நான்கு நாட்கள் மட்டுமே அங்கு தங்கி நடிக்க வேண்டி இருந்ததால், நான்கு நாட்களுக்கு தேவையான உடை மட்டுமே எடுத்து சென்றுள்ளளார்.

மேலும் செய்திகள்: செருப்பால் அடிவாங்கும் ஜோதிகா... நொடிக்கு நொடி பரபரப்பு! 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலர் இதோ..!
 

இதனிடையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அபுதாபியில் கடந்த இரண்டு மாதங்களாக நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளோடு நடிகை மெளனிராய் சிக்கி தவித்து வருகிறார் என்கிற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில் ’இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவே இல்லை என்றும் ஒவ்வொரு நாளும் விமானங்கள் எப்போது கிளம்பும் என்பதை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் இருப்பினும் இங்கு ஒருசில நண்பர்கள் இங்கு இருப்பதால், நிம்மதியாக இருப்பதாகவும் விரைவில் இந்தியாவிற்கு திரும்ப தான் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: மொட்டை மாடியில்... குட்டை பாவாடையில்... உடலை வளைத்து நெளித்து கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை வேதிகா!
 

மேலும் ஊரடங்கில் தனக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நல்ல பாடத்தை கற்று கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.