ஏற்கனவே, பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான அருண் பாண்டியனின் மகள், கீர்த்தி பாண்டியன் தன்னுடைய கிராமத்தில், அவருக்கு சொந்தமாக உள்ள, நிலத்தில் நிலம் உழுவது, நாற்று நடுவது போன்ற பணிகளை செய்வதாக அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்த நிலையில், அவரை தொடர்ந்து பிரபல இளம் ஹீரோ ஒருவர், விவசாய தொழில் செய்வதாக கூறி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில், ’மதயானைகூட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவாக  அறிமுகமானவர் நடிகர் கதிர். இந்த படத்தை தொடர்ந்து, தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 

அந்த வகையில், ’கிருமி’ ’விக்ரம் வேதா’ , 'சிகை', 'பரியேறும் பெருமாள்' போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. மேலும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான, 'பிகில்' படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் ஊரடங்கு ஓய்வு காரணமாக,கோலிவுட் திரையுலகில் எந்த படப்பிடிப்புகளும் நடைபெறாததால், இளம் நடிகர்கள் பலர் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அதன்படி நடிகர் கதிரும் தனது சொந்த கிராமத்தில்  அவருடைய ஒருநாள் பொழுதுபோக்கு என்ன என்பதையும் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து இவர் பகிர்த்துள்ள புகைப்படத்தில்,  மண்வெட்டியால் மண்ணை எடுப்பது போல் உள்ளது.  மேலும் விவசாயிகள் சாதாரணமாக செய்யும் வேலையைத்தான் நகரத்தில் உடற்பயிற்சி என்ற பெயரில் ஜிம்மில் செய்கிறார்கள் என்று நடிகர் கதிர் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார். 

அந்த புகைப்படம் இதோ..