கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய படங்களே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால்,  இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பின், ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை,  திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா. 

மேலும் செய்திகள்: கோலிவுட் திரையுலகில் முதல் இடத்தை பிடித்து மாஸ் காட்டும் விஜய்! டாப் ஹீரோஸ் பட்டியலில் யாருக்கு எந்த இடம்?
 

அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்' . இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்  நிறுவனம் தயாரித்துள்ளது. எப்போதும் போல்  இந்த படமும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், ஜோதிகாவை தவிர, இயக்குனர் பாரதி ராஜா, பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: மொட்டை மாடியில்... குட்டை பாவாடையில்... உடலை வளைத்து நெளித்து கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை வேதிகா!
 

கொரோனா பிரச்சனையால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால்  'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின்  தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா ஓடிடி பிளாட் ஃபாமில், இந்த படத்தை வெளியிட வெளியிட முடிவு செய்தார். ஆரம்பத்தில் இதற்கு அதிக அளவில் எதிர்ப்புகள் கிளப்பினாலும், பின் சூர்யாவிற்கு ஆதரவாக 30 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்ததால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

 ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு சூர்யா விற்றதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

கொரோனா பிரச்சனை உச்சத்தில் உள்ள இந்த சமயத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதி சரியான முடிவெடுத்ததாக ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பொன்மகன் வந்தாள் திரைப்படத்தின் ட்ரைலர் மே 21ம் தேதி இன்று  ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

பெண் குழந்தைகள் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. அதே போல் கருப்பு கோட் அணிந்து, லாயர் வேடத்திலும், பேச்சிலும் அசத்தியுள்ளார் ஜோதிகா. மேலும் பெண்ணை பறிகொடுத்த பெண் ஒருவர் ஜோதிகாவை செருப்பால் அடிக்கும் காட்சியும் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நொடியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலர் இதோ...