ஊரடங்கு நேரத்தில் எங்கும் வெளியில் செல்லமுடியாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள், வீட்டிலேயே தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை வேதிகா, தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் வெறித்தனமாக போட்ட ஆட்டம் வைரலாகி வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு, 'மதராசி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வேதிகா. ' முனி',' காளை', 'காஞ்சனா', உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.  இவரால் கோலிவுட் திரையுலகில், முன்னணி இடத்தை பிடிக்க முடியாததால், கன்னடம், தெலுங்கு, திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார்.

மற்ற மொழிகளில் இவர் நடித்த படடங்கள் தொடந்து வெற்றி பெற்றதால், முன்னணி நடிகையாக மாறினார். கடைசியாக தமிழில் இவர் கடந்த ஆண்டு ராகவா லாரன்சுடன் நடித்த 'காஞ்சனா 3 ' திரைப்படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தற்போது 'விநோதன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த வருடத்தின் கடைசியில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக அணைத்து சினிமா பணிகளும் முடங்கி உள்ளதால், வீட்டில் இருக்கும் வேதிகா, விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, தன்னுடைய மொட்டை மாடியில், குட்டை பாடவையோடு ஆடிய அசத்தல் டான்ஸை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ இதோ...