Asianet News TamilAsianet News Tamil

அப்படி என்ன மாமா அவசரம்.. மாரிமுத்துவுடன் நேற்று எடுத்த புகைப்படம் - வேதனையை பகிர்ந்த நந்தினி!

பிரபல எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து அவர்கள், இன்று காலை மாரடைப்பு காரணமாக தன்னுடைய 57 வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actress Hari Priya Shared picture of her with actor marimuthu which took a day before his death ans
Author
First Published Sep 8, 2023, 6:35 PM IST

சுமார் 27 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வந்த குணசேகரன், இன்னும் ஓரிரு மாதத்தில் தன் சொந்த உழைப்பில் கட்டிய வீட்டில் குடியேற இருந்த நிலையில், அந்த வீட்டில் ஒரு நாள் கூட வாழாமல் உயிரிழந்துள்ள சோகம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

எதிலும் வெளிப்படையான பேச்சு, சட்டென்ற கோவம், அனைவரையும் அரவணைக்கும் குணம், நேர்த்தியான நடிப்பு என்று, மிக குறுகிய காலத்தில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர்கூட்டத்தை சேர்த்தவர் மாரிமுத்து. குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய கதாபாத்திரம் கெட்டவராக காண்பிக்கப்பட்டாலும், அனைவரும் அவரை புகழாத நாளில்லை. 

ஒரே பிரேம்.. ரெண்டு லாஸ்.. ஆடிப்பாடி என்ஜாய் செய்த அந்த இருவரும் இப்போ இல்ல - வேதனையில் மூழ்கிய ரசிகர்கள்!

இந்நிலையில் அவருடைய திடீர் மரணம், அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது, குறிப்பாக அவருடன் அந்த சீரியலில் எப்போது சண்டைபோடும் நந்தினி என்கிற ஹரிப்ரியா, மாரிமுத்துவின் உடலை கண்டு கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சூழலில் அவர் இப்பொது ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். 

அந்த புகைப்படம் நேற்று ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் "ஏன் எங்களை விட்டு சென்றீர்கள், அப்படி என்ன அவசரம் சார்.. உங்களை நந்தினி மிஸ் பண்ணுவா மாமா, உண்மையான கலைஞன் இறப்பதில்லை, எங்கள் இதயங்களில் எப்போதும் நீங்கள் இருப்பீர்கள்" என்று மனம் நொந்து எழுதியுள்ளார்.   

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துவங்கி, திரைத்துறை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் அவருக்கு தங்களது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். 

கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை! கனவு இல்லத்தில் ஒரு நாள் கூட வாழாமல் உயிர்விட்ட சோகம்!

Follow Us:
Download App:
  • android
  • ios