அசோக் செல்வன் - ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ஓ மை கடவுளே". ஜி. டில்லிபாபு தயாரித்துள்ள இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படம் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டார். அது சோசியல் மீடியாவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ள விஜய் சேதுபதியின் கேரக்டர் என்ன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. படம் குறித்து பேசியுள்ள இயக்குநர் அஷ்வத், விஜய் சேதுபதி வரும் காட்சி தான் படத்திற்கே சர்ப்ரைஸ். திடீரென கடவுளாக தோன்றும் விஜய் சேதுபதி, அசோக் செல்வனுக்கு கோல்டன் டிக்கெட் ஒன்றை கொடுக்கிறார், அதில் இருந்து தான் கதையே சூடு பிடிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தினாரா யோகிபாபு..? கதறும் தயாரிப்பாளர்...!

"சூது கவ்வும்" படத்தில் நடித்த போதிலிருந்தே அசோக் செல்வனுடன் நண்பனாக இருந்து வரும் விஜய் சேதுபதி, "ஓ மை கடவுளே" படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதுமே, சற்றும் யோசிக்காமல் ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க: கணவர் ஏமாற்றியதால் தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை ஜெயஸ்ரீ... அம்மா பாணியில் மகள் எடுத்த அதிரடி முடிவு... வைரலாகும் வீடியோ...!

ரொமான்டிக் காமெடி படமான இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம்.