பிஜி மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் முருகன் இயக்கத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள படம் காக்டெய்ல். இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. கூடவே சர்ச்சையும் பற்றிக்கொண்டது. காக்டெயில் என்ற தலைப்பு உள்ள படத்திற்கு முருகன் கெட்டப்பில் யோகிபாபு நிற்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது பிரச்சனையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: விஜய்யின் காக்கிச்சட்டையை எடுத்து ரஜினிக்கு மாட்டிவிட்ட முருகதாஸ்... ஒர்க் அவுட் ஆகாமல் போன சென்டிமெண்ட்..!

தமிழ் கடவுளான முருகனை அவமதிப்பதாக காக்டெயில் படக்குழுவினர் மீது இந்து அமைப்புகள் குற்றம் சுமத்தின. இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் விஸ்வரூபம் எடுத்தன. இதுகுறித்து தயாரிப்பாளர் பிஜி முத்தையா விளக்கம் அளித்துள்ளார். இப்படத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறவை இனமான காக்டெய்ல் என்ற கிளி பங்கேற்றிருப்பதால் இயக்குநரின் பரிந்துரையை ஏற்று படத்திற்கு இந்த தலைப்பு வைக்கபட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: கணவர் ஏமாற்றியதால் தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை ஜெயஸ்ரீ... அம்மா பாணியில் மகள் எடுத்த அதிரடி முடிவு... வைரலாகும் வீடியோ...!

அந்த படத்தில் ஒரு காட்சியில் யோகிபாபுவின் கனவில் தமிழ் கடவுள் முருகன் தோன்றுவார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பயன்படுத்தினோம். இதைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் இப்படிஒரு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்றும், யாரையும் புண்படுத்தவோ, தமிழ் கடவுள் முருகனை இழிபடுத்தவோ சிந்திக்க கூட இல்லை என்று டோட்டலாக சரண்டர் ஆகிவிட்டார்.