ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கல் விருந்தாக தர்பார் திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக தர்பாரை வெளியிட்ட லைகா, எதிர்பார்த்த அளவிற்கு வசூல் ஆகாததால் மரண அடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போட்ட காசு கிடைக்காததால் கடுப்பான விநியோகஸ்தர்களும் அடிக்கடி ரஜினி வீட்டு வாசல் முன்பு நிற்கின்றனர். 

இதையும் படிங்க: தமிழ்நாடுய்யா இது... ரஜினியை ஆள அனுமதிக்க முடியாது... ஆவேசமாக கர்ஜிக்கும் இயக்குநர் பாரதிராஜா..!

இப்படி ஒரே படத்தில் லைகாவையும், சூப்பர் ஸ்டாரையும் சிக்கலில் சிக்கவைத்தது வேறு யாரும் அல்ல, நம்ம ஏ.ஆர்.முருகதாஸ் தான். போலீஸ் கெட்டப்பில் நடித்தால் அந்த படம் ஓடாது என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அசைக்க முடியாத சென்டிமெண்ட். அதனால் கடந்த 25 வருடங்களாக சூப்பர் ஸ்டாருக்கு எந்த இயக்குநரும் காக்கி சட்டை போட்டு அழகு பார்க்க முன்வரவில்லை. 

இதையும் படிங்க: ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிம்புவின் மாநாட்டில் கலந்த அப்பா, மகன்... பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மெகா அப்டேட்...!

இந்த விஷயத்தில் ரஜினிகாந்தை சமாதானம் செய்த ஏ.ஆர்.முருகதாஸ், தர்பார் படம் கண்டிப்பா ஹிட்டாகும் என நம்பிக்கை கொடுத்து காக்கி சட்டை போடவைத்தார். ரஜினியும் மூன்று முகம் போல தர்பாரும் தப்பித்துக் கொள்ளும் என்று நினைத்து நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் சூப்பர் ஸ்டாரின் கணக்கு தப்பாய் போனது. அதனால் தான் தர்பார் படத்தின் நஷ்டத்திற்கு இழப்பீடு கேட்டு, விநியோகஸ்தர்கள் சூப்பர் ஸ்டாரை பார்க்க படையெடுக்கின்றனர். 

இதையும் படிங்க: "பிகினி போட்டால் பிடிக்காது"... பிகினி உடையில் படு கவர்ச்சிகாட்டி... தண்ணீருக்குள் தண்ணியடிக்கிறவங்களை மட்டும் பிடிக்குமா தர்ஷன்..?

தர்பார் பட ரிலீஸுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் "ராணுவ வீரராக ஹீரோ நடித்தால் அந்த படம் ஓடாது என்ற சென்டிமெண்ட் உள்ளது. அதையே நான் விஜய்யை வைத்து துப்பாக்கி படம்  மூலம் சரி செய்து விட்டேன். துப்பாக்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. எனவே காக்கி சட்டை சென்டிமென்ட்டும் கண்டிப்பா மாறும்" என நம்பிக்கை கொடுத்ததாக கூறியிருந்தார். எது எப்படியோ ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிட மாதிரி என கிளம்பிய ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியை நொறுக்கிவிட்டார்.