கால்ஷிட் சொதப்பல்களால் நீண்ட நாட்களாக ஷூட்டிங்கில் பங்கேற்காமல் இருந்த சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மஹா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சிம்புவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

இதையும் படிங்க: தமிழ்நாடுய்யா இது... ரஜினியை ஆள அனுமதிக்க முடியாது... ஆவேசமாக கர்ஜிக்கும் இயக்குநர் பாரதிராஜா..!

இந்நிலையில் நேற்று சிம்பு தனது 37வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், ரசிகர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார். இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்க உள்ள மாநாடு படத்தின் முக்கிய அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: "பிகினி போட்டால் பிடிக்காது"... பிகினி உடையில் படு கவர்ச்சிகாட்டி... தண்ணீருக்குள் தண்ணியடிக்கிறவங்களை மட்டும் பிடிக்குமா தர்ஷன்..?

சிம்புவின் மாநாடு படத்தில் இயக்குநர் பாராதிராஜாவின் மகனான மனோஜ், பிக்பாஸ் பிரபலம் டோனி, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சிம்பு கூட்டணியில் எஸ்.ஜே.சூர்யா கைகோர்த்ததை கேள்விப்பட்ட ரசிகர்கள் துள்ளி குதிக்கின்றனர். செம்ம காஸ்டிங், ஒருவேலை சிம்புவிற்கு எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனா இருப்பாரோ? அப்படி இருந்தால் செம்ம மாஸாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.