ஓட்டுமொத்த சின்னத்திரையும் பேசி, பேசி மாய்ந்து போன விவகாரம் ஜெயஸ்ரீ- ஈஸ்வர் குடும்பச் சண்டை தான். சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தனது கணவர் ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து மூன்று பேரும் தங்களது தரப்பை முன்வைத்து மாறி, மாறி பேட்டி கொடுத்தனர். 

இதையும் படிங்க: "பிகினி போட்டால் பிடிக்காது"... பிகினி உடையில் படு கவர்ச்சிகாட்டி... தண்ணீருக்குள் தண்ணியடிக்கிறவங்களை மட்டும் பிடிக்குமா தர்ஷன்..?

இந்நிலையில் கணவர் ஈஸ்வர் ஏமாற்றியதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை எனக்கூறிய ஜெயஸ்ரீ, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஜெயஸ்ரீ அனுப்பிய வாட்ஸ் அப் மெசஜெஜைக் கேட்டு பதறியடித்து வந்த அவரது நண்பர்கள் அவரை பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிம்புவின் மாநாட்டில் கலந்த அப்பா, மகன்... பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மெகா அப்டேட்...!

இந்த கலாட்டாவிற்கு மத்தியில் ஜெயஸ்ரீ-யின் செல்ல மகள் ரேத்வா அசத்தலான காரியம் ஒன்றை செய்து முடித்துள்ளார். அதாவது விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ள பொம்முகுட்டி அம்மாவுக்கு என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலுக்காக விஜய் டி.வி. ஒளிபரப்பியுள்ள புரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது.