சாதி, மதம் பார்க்காம குழந்தைகளை படிக்கவையுங்கடா... தேவர்மகன் சர்ச்சை குறித்து நடிகர் சதீஷ் பேட்டி
கோவையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சதீஷ், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நகைச்சுவை நடிகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தான் நாயகனாக நடிக்கும் வித்தைக்காரன் படப்பிடிப்பு கோவையில் நடந்ததது எனவும் இரண்டு வாரங்களுக்கு பிறகு கோவைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவத்தார். மேலும் கல்லூரியில் உள்ள கரும்பலகையை பார்க்கும்போது "யார் பேசுனாலும் எழுதி வையுங்கள் என்று சொன்னால் அதில் என் பெயர் தான் இருக்கும், கரும்பலகையை பார்த்தால் இப்போது கூட பயம் வரும். அவ்வப்போது கனவில் தேர்வு எழுவதுவது போல் தோன்றுவதால் அதிர்ச்சியில் எழுந்துவிடுவேன்" எனவும் தெரிவித்தார்.
படிக்கும்போது எவ்விதமான தவறான விஷயத்திலும் ஈடுபட வேண்டாம், மது, போதை பழக்கம் உள்ளிட்டவை உடல்நலத்தை கெடுப்பதோடு, கல்வியையும் கெடுக்கின்றன. ஆசிரியர்களிடம் மாணவர்கள் மரியாதை நடந்து கொள்ள வேண்டும், நாங்களெல்லாம் படிக்கும்போது ஆசியருக்கு பயப்படுவோம், ஆனா இப்போது உள்வாடாக மாறிவிட்டது. மாணவர்கள் தகாத வார்த்தைகள் பேசுவது போன்று நிறைய வீடியோக்களை பார்க்கும் போது வேதனையளிக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... பட வாய்ப்பே இல்ல... ஆனா ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய ஷாலு ஷம்மு! எப்புட்ரா என ஷாக் ஆன நெட்டிசன்கள்
தொடர்ந்து பேசிய நடிகர் சதீஷ், நாய்சேகர் படத்திற்கு பிறகு சட்டம் என் கையில் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளோம், இது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும் என தெரிவித்தார். லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனர் வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படம் தான் என்னுடைய அடுத்த வெளியீடாக இருக்கும். அடுத்த வாரம் மிகப் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியடைந்து இருக்கிறது. நல்ல பிசினஸாக இருக்கிறது. இருப்பினும் தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும். நான் சிகரெட் பிடிக்க மாட்டேன், படத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் சிகரெட் தொடர்பான காட்சிகளில் நடிகர்கள் நடிக்கிறார்கள் என அவர் தெரிவித்தார். திரைபட்டங்களில் உள்ள விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறிய சதீஷ், சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். விஜய்யுடன் போட்டோ எடுக்கவேண்டும் என்பதற்காக படித்தால் நல்லது தானே என தெரிவித்ததோடு விஜய் இன்னும் இதுபோன்று மாணவர்களுக்கு உதவும் திட்டங்களை செய்வார் என தெரிவித்தார்.
மாமன்னன் இசைவெளியீட்டு விழா சர்ச்சை குறித்த கேள்விக்கு, ஜெயம் ரவி கூறியது போல் நானும் தூங்கிவிட்டேன் என கூறியதோடு, கருத்து பகிரபட்டத்தை தான் ஒரு ஆடியன்ஸாக பார்ப்பதாகவும், தேவர் மகன் எனக்கு மிகவும் படித்த படம், இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களைப் பார்க்காமல் பிள்ளைகளை படிக்கவையுங்கடா என்ற நல்ல கருத்தைமட்டும் தான் எடுத்துக்கொள்வதாகவும், மாரி்செல்வராஜ் எழுதிய லெட்டரை நான் படிக்கவில்லை எனவும் சதீஷ் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... 46 வயசானாலும் குழந்தை சார் நீங்க... மகனின் சைக்கிளில் ஜாலியாக ரைடு போன செல்வராகவன் - வைரலாகும் கியூட் வீடியோ