பட வாய்ப்பே இல்ல... ஆனா ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய ஷாலு ஷம்மு! எப்புட்ரா என ஷாக் ஆன நெட்டிசன்கள்
தமிழ் நடிகையான ஷாலு ஷம்மு ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு காரை கம்மி விலைக்கு வாங்கி உள்ளதை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
shalu shamu
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இதில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்தடுத்து மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றி பெறாததால், இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
shalu shamu
பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் சோசியல் மீடியாவில் செம்ம பிசியாக இயங்கி கொண்டிருக்கிறார் ஷாலு ஷம்மு. அதில் தனது ஒர்க் அவுட் வீடியோ, சால்சா டான்ஸ் ஆடும் வீடியோ மட்டுமின்றி அடிக்கடி படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதனையும் பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. பட வாய்ப்பு இல்லாததால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் தகவல் பரவி வந்தது. ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டார்.
இதையும் படியுங்கள்... மறைந்த முதல் கணவர்.. நைட் பார்ட்டியில் போதையில் ஆண் நண்பருடன் நெருக்கம் காட்டிய 45 வயது நடிகை - லீக்கான போட்டோ
shalu shamu
இந்த நிலையில், நடிகை ஷாலு ஷம்மு சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறி பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். அதன்படி விலையுயர்ந்த ஜாகுவார் காரை தான் நடிகை ஷாலு ஷம்மு வாங்கி இருக்கிறார். இதன் விலை ரூ.1 கோடி இருக்குமாம். இந்த கார் வாங்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக ஷாலு ஷம்மு நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
shalu shamu
ரூ.1 கோடி மதிப்புள்ள இந்த ஜாகுவார் காரை நடிகை ஷாலு ஷம்மு ரூ.50 லட்சத்திற்கு தான் வாங்கி உள்ளாராம். இது பயன்படுத்தப்பட்ட கார் என்பதால் இதனை பாதி விலைக்கு வாங்கி இருக்கிறாராம் ஷாலு ஷம்மு. இது ஒருபுறம் இருக்கு பட வாய்ப்பே இல்லாமல் இருக்கும் அவருக்கு எப்படி இவ்ளோ காசு கிடைக்கிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை ஷாலு ஷம்மு ஸ்கின் கேர் கிளீனிக் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலம் சம்பாதித்த தொகையின் மூலம் தான் இந்த காரை அவர் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு.. பிரபல தமிழ் நடிகருடன் விரைவில் டும்.. டும்..டும்! சம்மந்தியாகும் பிரபலங்கள்!