46 வயசானாலும் குழந்தை சார் நீங்க... மகனின் சைக்கிளில் ஜாலியாக ரைடு போன செல்வராகவன் - வைரலாகும் கியூட் வீடியோ
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், மகனின் சைக்கிளில் ஜாலியாக ரைடு போன வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவர், மயக்கம் என்ன என பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கி உள்ளார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நானே வருவேன். தனுஷ் நாயகனாக நடித்த இத்திரைப்படம் கடந்தாண்டு ரிலீஸ் ஆனது. பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியானதால் இப்படம் தோல்வியை சந்தித்தது.
நானே வருவேன் படத்துக்கு பின்னர் இயக்குனர் செல்வராகவன் படங்கள் எதுவும் இயக்காவிட்டாலும், நடிப்பில் செம்ம பிசியாக இருக்கிறார். செல்வராகவனை சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகனாக அறிமுகப்படுத்தினார் அருண் மாதேஸ்வரன். இதையடுத்து விஜய்யின் பீஸ்ட், மோகன் ஜி இயக்கிய பகாசூரன் போன்ற படங்களில் நடித்த செல்வராகவன், தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... மறைந்த முதல் கணவர்.. நைட் பார்ட்டியில் போதையில் ஆண் நண்பருடன் நெருக்கம் காட்டிய 45 வயது நடிகை - லீக்கான போட்டோ
இதுதவிர ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 போன்ற படங்களுக்கு திரைக்கதை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் செல்வராகவன். அவர் மேற்கண்ட இரண்டு படங்களின் அப்டேட்டுகளை எப்போது வெளியிடுவார் என ரசிகர்கள் ஒருபுறம் ஆவலோடு காத்துக்கிடக்கும் நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் செல்வா.
அந்த வீடியோவில் மகனின் குட்டி சைக்கிளில் அவனை பின்னே அமர வைத்து செல்வராகவன் ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் 40 வயசு குழந்தை சார் நீங்க என கமெண்ட் செய்து வருவதோடு, மகனின் மீது அவர் வைத்துள்ள அளவில்லா பாசத்திற்கு இதுவே எடுத்துக்காட்டு என வியந்து பாராட்டியும் வருகின்றனர். செல்வராகவனின் இந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பட வாய்ப்பே இல்ல... ஆனா ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய ஷாலு ஷம்மு! எப்புட்ரா என ஷாக் ஆன நெட்டிசன்கள்