கொரோனா பிரச்னையை கட்டுப்படுத்தும் விதமாக போடப்பட்ட, ஊரடங்கு உத்தரவால், கூலி வேலை செய்பவர்கள் முதல், சிறு - குறு தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் வரை  அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்: 'காக்க காக்க' படத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்! சூர்யாவுடன் ஜோரா நிற்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
 

குறிப்பாக திரையுலகை நம்பி பிழைத்த வந்த பலருக்கும் இந்த இரண்டு மாதம், மிகப்பெரிய சோதனை காலம் என்றே கூறலாம். பல நலிந்த நடிகர்கள், நாடக கலைஞர்கள், மற்றும் சீரியல் நடிகர்கள் இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். 

அதே நேரத்தில், சமூக இடைவெளியை கடைபிடித்து செய்யக்கூடிய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சில வற்றிற்கு சில தளர்வுகள் கொண்டுவரப்பட்ட போதிலும், படப்பிடிப்பு மற்றும் சீரியல்கள் பணிகள் துவங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாவில்லை.

மேலும் செய்திகள்: பாத் ட்ரெஸ்ஸில்... அந்த இடத்தில் குத்திய டாட்டூவை தயக்கம் இல்லாமல் காட்டிய சாக்ஷி!
 

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக, வேலை இல்லாமலும், கடன் பிரச்சனைகள் அதிகரித்ததால், நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மும்பையை சேர்ந்த சின்னத்திரை நடிகர் மன்மீத் கிரேவல். 32 வயதாகும் இவர், பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார்.  தற்போது போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட வறுமையால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

மேலும் செய்திகள்: விரைவில் 'கொரோனாவை வெல்வோம்'...! போலீசாருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால்!
 

மன்மீத் கிரேவல் சில ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு விளம்பர படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித வாய்ப்பும் இல்லாமல் கடன் தொல்லைகளும் அதிகரித்தது. வீடு வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து கடன்காரர்கள் கடனைக் கேட்டு நச்சரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான இவர், தன்னுடைய வீட்டில்... மனைவியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருமணம் ஆகி இரண்டு வருடமே ஆகும் நிலையில்,  லாக்டவுன் வறுமை காரணமாக சின்னத்திரை நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் சின்னத்திரை நடிகர், நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.