இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் உச்சம் தொட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது. 

மேலும் செய்திகள்: 'காக்க காக்க' படத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்! சூர்யாவுடன் ஜோரா நிற்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
 

குறிப்பாக தமிழகத்திலேயே மிக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. இங்கு நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வரும் பாதிப்பு தற்போது 6 ஆயிரத்தை கடந்திருக்கிறது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாதி இருக்கிறது. இதன்மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,271 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அதிகபட்சமாக வடசென்னையின் ராயபுரத்தில் 1112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்புகளின் பட்டியலும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 20 திற்கும் மேற்பட்ட போலீசார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படி மக்களுக்காக, தூக்கம் இன்றி, இரவு பகலாக கஷ்டப்பட்டு வரும், போலீசாருக்கு பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: பாத் ட்ரெஸ்ஸில்... அந்த இடத்தில் குத்திய டாட்டூவை தயக்கம் இல்லாமல் காட்டிய சாக்ஷி!
 

சமீபத்தில் நடிகர் சூரி, கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள சென்னை போலீசாரை நேரடியாக சந்தித்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்தது மட்டும் இன்றி, ரியல் ஹீரோக்கள் என அவர்களை புகழ்ந்து, ஆட்டோகிராப் வாங்கினார். இவரை தொடர்ந்து, பிரபல நடிகையும்... பாடகியான ஆண்ட்ரியா பாடல் மூலம், தன்னுடைய நன்றிகளை ரியல் ஹீரோக்களுக்கு தெரிவித்தார்.

இவர்களை தொடர்ந்து, பிரபல நடிகரும் - தயாரிப்பாளருமான விஷுனு விஷால்  போலீசாருக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், "நானும் ஒரு போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். என்னுடைய தந்தை கடந்த 35 வருடங்களாக, காவல் துறையில் பணியாற்றிவிட்டு கடந்த வருடம் தான் ஓய்வு பெற்றார். தானே புயல், சென்னை வெள்ளம், போன்ற நேரங்களில்... அப்பா தன்னுடைய பணியை செய்ய செல்லும் போது, அவர்களுடைய குடும்பத்தின் மனநிலை எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இரவு பகல் பாராமல் ஓய்வின்றி வேலை செய்து வரும் அணைத்து போலீசாருக்கும் தன்னுடைய நன்றிகள்.

மேலும் செய்திகள்: கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு பெரிய வயிறு தான்..! இதுவரை வெளியிடாத அந்த ரகசியத்தை சொன்ன கனிகா !
 

தமிழகத்தில் இதுவரை, காவல் பணியில் இருந்த 25 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கபப்ட்டுள்ளனர். அவர்கள் சீக்கிரம் நலம் பெறுவார்கள் என்றும் விரைவில் கொரோனாவை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள வீடியோ இதோ: