Poo Ramu Death : மிகச்சிறந்த நடிகர்... என்னுடன் தான் கடைசியாக நடித்தார்- பூ ராமு மறைவால் கலங்கிய சூப்பர்ஸ்டார்
Poo Ramu Death : பூ ராமுவின் மறைவுச் செய்து கேட்டு சோகமடைந்ததாகவும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களுள் அவரும் ஒருவர் எனவும் மலையாள நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.
நாடகக் கலைஞரான ராமு, கடந்த 2008-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பூ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தந்தையாக திறம்பட நடித்திருந்ததால் இவரை பூ ராமு என்றே அழைத்தனர். இதையடுத்து சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை, ராம் இயக்கிய பேரன்பு, மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், தனுஷின் கர்ணன், சூர்யாவுடன் சூரரைப் போற்று என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் கேரக்டர்... லோகேஷின் முதல் சாய்ஸ் சூர்யா இல்ல.. இவர்தானாம் - வெளியானது விக்ரம் பட சீக்ரெட்
இவருக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நடிகர் பூ ராமு நேற்று மாலை உயிரிழந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் விஜய்... அஜித் லிஸ்ட்லயே இல்ல
அதேபோல் அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி பூ ராமு மறைவுக்கு டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ‘இரவின் நிழல்’ படத்துக்கு தனுஷ் செய்த உதவியால் நெகிழ்ந்துபோன பார்த்திபன் - வைரலாகும் டுவிட்டர் பதிவு
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : பூ ராமுவின் மறைவுச் செய்து கேட்டு சோகமடைந்ததாகவும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களுள் அவரும் ஒருவர் எனவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பதினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ள மம்முட்டி, தனது நடிப்பில் உருவாகி உள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் ஒரு அங்கமாக இருந்ததற்கு நன்றி என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.