‘இரவின் நிழல்’ படத்துக்கு தனுஷ் செய்த உதவியால் நெகிழ்ந்துபோன பார்த்திபன் - வைரலாகும் டுவிட்டர் பதிவு

Iravin Nizhal : இரவின் நிழல் படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாகும். இதில் நடிகை வரலட்சுமி, பிரிகிதா என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

Parthiban directional Iravin Nizhal movie release date announced by dhanush

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் பார்த்திபன். பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் இவர் கடைசியாக இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம், உலகளவில் கவனம் பெற்றது. அதற்கு காரணம் அப்படத்தில் நடித்திருந்தது இவர் மட்டும் தான். படம் முழுக்க இவர்மட்டுமே நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... ஷாருக்கை இறுக்கி கட்டிப் பிடிச்சி செம்ம ஃபீலிங்.. டிடி வெளியிட்ட வேற லெவல் போட்டோ

அவரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்ததோடு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து தற்போது மேலும் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார் பார்த்திபன். அவர் நடிப்பில் தற்போது இரவின் நிழல் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தையும் அவரே இயக்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம் செய்த சினேகா பிரசன்னா.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்!

இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாகும். இதில் நடிகை வரலட்சுமி, பிரிகிதா என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் பார்த்திபன், இதனை இந்த மாதம் 24-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் கடந்த வாரம் ஏராளமான படங்கள் ரிலீசானதால் ரிலீஸ் தேதியை மாற்றினார்.

இதையும் படியுங்கள்... இலங்கைக்கு பிளாக் பாண்டி செய்த உதவி.. கப்பல் சேவை கொடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்!

இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் தான் வெளியிட்டார். அவர் செய்த இந்த உதவியால் நெகிழ்ந்துபோன பார்த்திபன், நன்றி தம்பி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios