கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் விஜய்... அஜித் லிஸ்ட்லயே இல்ல

Most searched Asian celebrities in google : 2022-ம் ஆண்டு முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

most searched asian celebrities in google list released vijay in top among the kollywood actors

மனிதர்களின் வாழ்வில் கூகுளும் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். எந்த ஒரு தகவல் வேண்டுமானாலும் நாம் தயக்கமின்றி கேட்கும் ஒரே இடம் கூகுள் தான். அப்படி உலகின் முன்னணி தேடுபொறி தளமாக இருந்து வருகிறது கூகுள். அந்நிறுவனம் அதன் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள், நடிகர், நடிகைகள், பிரபலங்கள் குறித்த டேட்டாக்களை அவ்வப்போது வெளியிடும்.

இதையும் படியுங்கள்... Dharsha Gupta : காட்டுக்குள் உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் ஆட்டம்போட்ட தர்ஷா குப்தா... வைரலாகும் கிளாமர் வீடியோ

அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ் போன்ற கோலிவுட் நடிகர்களின் பெயர்களும், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் போன்ற தெலுங்கு நடிகர்களின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன. ஆனால் இந்த லிஸ்டில் நடிகர் அஜித் பெயர் இடம்பெற வில்லை.

இதையும் படியுங்கள்... Nayanthara : ஹனிமூன் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட வராம... நயன்தாரா செய்த செயலால் வாயடைத்துப் போன ரசிகர்கள்

most searched asian celebrities in google list released vijay in top among the kollywood actors

இந்த பட்டியலில் நடிகர் விஜய் 22-வது இடத்தில் உள்ளார். அதேபோல் தனுஷ் 61-வது இடத்தையும், சூர்யா 63-வது இடத்தையும், ரஜினிகாந்த் 77-வது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நடிகர் அஜித், கமல்ஹாசன் போன்ற தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இடம்பெறாதது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... விருதுநகர் ஜெயிலில் குக் வித் கோமாளி புகழ்... அவர் திடீரென சிறை செல்ல காரணம் இதுதான்

இந்த பட்டியலில் சல்மான் கான், ஷாருக்கான், அக்‌ஷய் குமார், ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஹிரித்திக் ரோஷன், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப், வருண் தவான் என பாலிவுட் நடிகர்கள் தான் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் இந்த பட்டியலில் நடிகைகளும் அதிக அளவில் இடம்பெற்று உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios