Nayanthara : ஹனிமூன் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட வராம... நயன்தாரா செய்த செயலால் வாயடைத்துப் போன ரசிகர்கள்
Nayanthara : நேற்று முன்தினம் ஹனிமூன் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய விக்கி - நயன் ஜோடி, வீட்டுக்கு கூட வராமல் நேராக மும்பை சென்றுள்ளது.
நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள பிரம்மாண்டமான ரெசார்ட் ஒன்றில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்.. இதுவும் போச்சா... சொந்த படமும் சொதப்பியதால் சோகத்தில் கீர்த்தி சுரேஷ் - இனி உதயநிதி தான் காப்பாத்தனும்!
திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த விக்கி - நயன் ஜோடி சில நாட்கள் கேரளாவில் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் ஹனிமூன் கொண்டாட சென்றனர். அதன்படி தாய்லாந்து நாட்டிற்கு சென்ற அந்த ஜோடி அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து ஹனிமூனை கொண்டாடியது.
இதையும் படியுங்கள்.. Vanitha Vijayakumar : கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை வனிதா...! காட்டுத்தீ போல் பரவும் போட்டோ - பின்னணி என்ன?
ஹனிமூன் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினந்தோறும் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஹனிமூன் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய இந்த ஜோடி, வீட்டுக்கு கூட வராமல் நேராக மும்பை சென்றுள்ளது.
இதையும் படியுங்கள்.. சிம்ரன் முதல் சமந்தா வரை... டாப் ஹீரோயினாக இருக்கும்போதே ஐட்டம் டான்ஸ் ஆடி ஷாக் கொடுத்த நடிகைகள் - ஒரு பார்வை
அங்கு அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அதில் கலந்துகொள்வதற்காக நயன்தாரா அங்கு சென்றுள்ளார். வேலை விஷயத்தில் கரெக்டாக இருக்கும் நயன்தாராவை பார்த்து வாயடைத்துப் போன அவரது ரசிகர்கள், இதனால் தான் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர். மறுபுறம் விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்துக்கான பணிகளை தொடங்கி உள்ளார்.