இதுவும் போச்சா... சொந்த படமும் சொதப்பியதால் சோகத்தில் கீர்த்தி சுரேஷ் - இனி உதயநிதி தான் காப்பாத்தனும்!
Keerthi Suresh : தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் தமிழில் மாமன்னன் படம் உள்ளது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து ரஜினி முருகன், ரெமோ என சிவகார்த்திகேயன் உடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆன கீர்த்தி சுரேஷ், பின்னர் தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த படங்கள் வரிசையாக பிளாப் ஆனது.
இதையடுத்து மகாநடி எனும் பயோபிக் படத்தில் நடித்ததன் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார் கீர்த்தி சுரேஷ். இப்படம் அவரது சினிமா கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இதையும் படியுங்கள்.... Nayanthara : ஹனிமூன் போட்டோஸை வெளியிட்ட விக்னேஷ் சிவன்... அதுல நயன்தாரா எடுத்த போட்டோ வேற லெவல்
மகாநடி படத்துக்கு முன்பு வரை கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், அதன்பின் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடிப்பேன் என முடிவெடுத்தார். அப்படி அவர் தேர்வு செய்து நடித்த பெண்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி, சாணிக் காயிதம் ஆகிய படங்கள் வரிசையாக பிளாப் ஆகின.
இதையும் படியுங்கள்.... Karthi : கார்த்தி ஹீரோ - விஜய் சேதுபதி வில்லன்! மாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லீக்கானது
கடந்த 4 ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் ஒன்றுகூட ஹிட் ஆகவில்லை. இதனால் இவர் தனது சொந்த படமான வாஸியை மலைபோல் நம்பி இருந்தார். டோவினோ தாமஸுக்கு ஜோடியாக நடித்திருந்த இப்படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் இப்படமும் அவருக்கு வெற்றிக் கனியை கொடுக்கவில்லை. இவ்வாறு வரிசையாக படங்கள் பிளாப் ஆவதால் அவரின் மார்க்கெட்டும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இதையும் படியுங்கள்.... AR Murugadoss : நோ சொன்ன விஜய்... ஓகே சொன்ன அஜித்! படு குஷியில் முருகதாஸ் - மீண்டும் இணையும் தீனா கூட்டணி!
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் தமிழில் மாமன்னன் படம் உள்ளது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதுதவிர தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா என்கிற படமும், சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்து வருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.