AR Murugadoss : நோ சொன்ன விஜய்... ஓகே சொன்ன அஜித்! படு குஷியில் முருகதாஸ் - மீண்டும் இணையும் தீனா கூட்டணி!
AR Murugadoss : தீனா படத்தில் இணைந்து பணியாற்றி உள்ள அஜித் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி தற்போது 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைய உள்ளது.
அஜித் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே வெற்றிகண்ட இவர் அடுத்ததாக விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இயக்கினார். இப்படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த ஏ.ஆர்.முருகதாஸ், முன்னணி இயக்குனராகவும் உயர்ந்தார்.
இதையும் படியுங்கள்... பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் அனுப்புறாங்கனு சொன்னதால் எதிர்ப்பு! மாட்டுசாணி மாதவன் என வறுத்தெடுக்கும் Netizens
இதையடுத்து சூர்யா நடித்த கஜினி படத்தை இயக்கினார் முருகதாஸ். இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அவர் விலகியதால், அவருக்கு பதில் சூர்யா நடித்தார். இப்படமும் முருகதாஸுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் படியுங்கள்... Shakeela : விஜய் கூடலாம் டான்ஸ் ஆடி இருக்கா... ஆனா 23 வயசுலயே இறந்துட்டா - தங்கை மறைவால் கலங்கிய ஷகீலா
இதையடுத்து துப்பாக்கி படம் மூலம் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்த முருகதாஸ், இந்த முறையும் வெற்றிவாகை சூடினார். நடிகர் விஜய்யின் கெரியரில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படமாக துப்பாக்கி அமைந்தது. இதன்பின்னர் கத்தி, சர்கார் என ஹாட்ரிக் வெற்றியையும் இந்த கூட்டணி ருசித்தது.
நடிகர் விஜய்யின் 65 படத்தை இயக்க முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் நீக்கப்பட்டு, நெல்சன் இப்படத்தை இயக்கினார். அது தான் அண்மையில் பீஸ்ட்டாக வெளிவந்தது. விஜய் படத்தில் இருந்து விலகிய பின் வேறு எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வருகிறார் முருகதாஸ்.
இதையும் படியுங்கள்... Samantha : 56 வயது நடிகருடன் காதலா...! நடிகை சமந்தாவின் அதிரடி முடிவால் ஷாக் ஆன ரசிகர்கள்
இந்நிலையில், அவர் நடிகர் அஜித் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தீனா படத்தில் இணைந்து பணியாற்றி உள்ள அஜித் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி தற்போது 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைய உள்ளது. அஜித்தின் 63-வது படத்தை முருகதாஸ் இயக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.