Asianet News TamilAsianet News Tamil

பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் அனுப்புறாங்கனு சொன்னதால் எதிர்ப்பு! மாட்டுசாணி மாதவன் என வறுத்தெடுக்கும் Netizens

Madhavan : பழைய பஞ்சாங்கத்துக்கும் இன்றைய ராக்கெட்ரிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மாதவன் அளித்த பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Actor Madhavan comment about mars mission create controversy
Author
Tamil Nadu, First Published Jun 26, 2022, 8:02 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த மாதவன், ராக்கெட்ரி படம் முலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ராக்கெட்ரி திரைப்படம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ததாக கடந்த 1994-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன், பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாக வைத்து தான் இந்த ராக்கெட்ரி படத்தை எடுத்துள்ளார் மாதவன். இதில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்திலும் மாதவன் தான் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாதவனிடம், பழைய பஞ்சாங்கத்துக்கும் இன்றைய ராக்கெட்ரிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மாதவன் அளித்த பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Actor Madhavan comment about mars mission create controversy

இதற்கு பதிலளித்த மாதவன், “ரொம்ப நல்ல கேள்வி, உண்மையிலேயே ரெண்டுக்கும் தொடர்பு இருக்கு. பூமியில் இருந்து மார்ஸுக்கு செயற்கைகோள் அனுப்பறதுக்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா எல்லாம் பல மில்லியன் செலவு செய்து, 30வது முறை, 32வது முறை என்று பலமுறைய முயற்சி செய்து தான் வெற்றி பெற்றார்கள். ஆனால் 2014ம் ஆண்டு இந்தியா அனுப்பிய முதல் செயற்கைகோளே வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது. 

எல்லா நாடுகளும் செவ்வாய் கிரகத்துக்கு போறதுக்கு, solid fuel எனப்படும் திட எரிபொருள், liquid fuel எனப்படும் திரவ எரிபொருள் மற்றும் கிரியோஜெனிக் என்ஜின் ஆகிய மூன்றையும் வைத்து தான் ராக்கெட் விட்டார்கள்.

இதற்காக அவர்கள் பலநூறு மில்லியன் டாலர்கள செலவு பண்ணினார்கள். ஆனால் நம்முடைய நாட்டில் இருக்கும் இன்ஜின் அந்த அளவு சக்தி வாய்ந்ததாக இல்லை. ஆனால் 2014-ல் இந்தியா சார்பில் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அணுப்பினார்கள். நம்முடைய பஞ்சாங்கத்தில் இருக்கும் வான வரைபடத்தில் கிரகங்கள் எல்லாம் எங்கே இருக்கிறது, அதனுடைய ஈர்ப்பு விசை எப்படி இருக்கிறது என எல்லாமே ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வச்சிட்டாங்க. 

அந்த பஞ்சாங்கத்தில் இருக்கும் தரவுகளை வைத்து தான் குறிப்பிட்ட நேரத்தில சரியான மைக்ரோ செகண்ட்ல ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் இருந்து இந்த ராக்கெட்டை அனுப்பினார்கள். ஆயிரம் வருடத்துக்கு முன்வே எழுதப்பட்ட இந்தத் தரவுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்குள்ள நம்ம செயற்கைகோள் வெற்றிகரமாக செல்ல உதவியாக இருந்தது. நம்மிடம் இருந்த கம்மியான் பட்ஜெட்ல, குறைவான சக்தி கொண்ட இஞ்ஜினை வச்சிக்கிட்டு இந்த mission சக்சஸ் ஆச்சுன்னா அதற்கு பஞ்சாங்கம் தான் காரணம்’ என ஒரே போடாக போட்டார் மாதவன்.

Actor Madhavan comment about mars mission create controversy

மாதவனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலானதை அடுத்து அவரை ட்ரோல் செய்து ஏராளமானோர் மீம் போட ஆரம்பித்துள்ளனர். சிலர் மாட்டுசாணி மாதவன் என்றெல்லாம் கிண்டலடித்துள்ளனர். அப்படி தன்னை மாட்டுசாணி மாதவன் என கிண்டலடித்த நபர், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சொன்ன கருத்தை பதிவிட்டிருந்தார். அதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார் மாதவன்.

அதில் மாதவனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள மயில்சாமி அண்ணாதுரை, பஞ்சாங்கத்தை வைத்துகொண்டு தற்போது செவ்வாய் கிரகத்துக்கு செல்வது என்பது முடியாத காரியம் என கூறி உள்ளார்.  

இதையும் படியுங்கள்... ச்ச.. அனிருத் இப்படி செய்வார்னு எதிர்பார்க்கல - புலம்பித் தள்ளும் தனுஷ் ரசிகர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios