ச்ச.. அனிருத் இப்படி செய்வார்னு எதிர்பார்க்கல - புலம்பித் தள்ளும் தனுஷ் ரசிகர்கள்

Thaaikelavi song : தனுஷ் - அனிருத் கூட்டணியில் 7 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் பாடல் என்பதால் தாய்கிழவி பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 

Dhanush fans disappointed over anirudh for Thaaikelavi song in thiruchitrambalam

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், கோலிவுட்டின் உச்ச நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, கமல், தனுஷ், விஜய் சேதுபதி என அனைவருடன் இந்த ஆண்டு பணியாற்றி விட்டார். இதுதவிர அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

அனிருத்தை திரையுலகில் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான். அவரின் 3 படம் மூலம் சினிமா பயணத்தை தொடங்கிய அனிருத், அவருடன் அடுத்தடுத்து வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் போன்ற படங்களில் பணியாற்றினார். இவர்கள் கூட்டணியில் பாடல்கள் வந்தாலே ஹிட்டு தான் என சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் இடம்பிடித்து இருந்தனர்.

Dhanush fans disappointed over anirudh for Thaaikelavi song in thiruchitrambalam

இந்த கூட்டணி 2015-ம் ஆண்டுக்கு பின் சேர்ந்து பணியாற்றவே இல்லை. இதனால் இவர்கள் கூட்டணி மீண்டும் எப்போது உருவாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தின் இருந்து தாய்கிழவி என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. தனுஷ் - அனிருத் கூட்டணியில் 7 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் பாடல் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்பாடல் ரசிகர்களை சுத்தமாக கவரவில்லை. அனிருத் இசையில் இந்த ஆண்டு வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில், இது தான் அவர் இசையமைத்திலேயே மோசமான பாடல் என ரசிகர்கள் சாடி வருகின்றனர். அனிருத் இப்படி செய்வார்னு சத்தியமா எதிர்பாக்கலேனு தனுஷ் ரசிகர்களும் புலம்பி வருகின்றனர். அடுத்த பாடலாவது ஹிட்டாகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...   பப்ளிசிட்டியே பிடிக்காதாம்! ஆனா வருஷத்துக்கு 365 போட்டோ வருது- அஜித்தை சீண்டிய ப்ளூ சட்டை.. கடுப்பான ரசிகர்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios