Karthi : கார்த்தி ஹீரோ - விஜய் சேதுபதி வில்லன்! மாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லீக்கானது
Karthi : பிசியான நடிகராக வலம் வரும் கார்த்தி அடுத்ததாக குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. இருப்பினும் இரண்டாம் பாதியில் இவரது ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். ஏனெனில் இவர் நடித்துள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீசாக உள்ளன. அதன்படி முதலாவதாக விருமன் படம் ரிலீசாக உள்ளது. இப்படம் ஆகஸ்ட் 31-ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Indian 2 : விக்ரம் கூட்டணியை விடாமல் துரத்தும் கமல்... இந்தியன் 2-விலும் இணையும் பிரபல மாஸ் நடிகர்
இதன்பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து தீபாவளி விருந்தாக கார்த்தியின் சர்தார் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Shakeela : விஜய் கூடலாம் டான்ஸ் ஆடி இருக்கா... ஆனா 23 வயசுலயே இறந்துட்டா - தங்கை மறைவால் கலங்கிய ஷகீலா
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் கார்த்தி அடுத்ததாக குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... 27 வருஷத்துக்கு பிறகும் அதே எனர்ஜி உடன் ‘சக்கு சக்கு வத்திகுச்சி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மன்சூர் அலிகான்
இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு லீக் ஆகி உள்ளது. அதன்படி ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ள படத்துக்கு ‘ஜப்பான்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.