Indian 2 : விக்ரம் கூட்டணியை விடாமல் துரத்தும் கமல்... இந்தியன் 2-விலும் இணையும் பிரபல மாஸ் நடிகர்
Indian 2 : ராம்சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தை முடித்த பின் இந்தியன் 2 பட பணிகளை தொடங்குவார் என கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் இந்தியன் 2. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பின் அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தையும் ஷங்கர் தான் இயக்குகிறார். இதில் கமல், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. இடையிடையே இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவின.
ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த படக்குழு விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவித்தனர். தற்போது ராம்சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தை முடித்த பின் இந்தியன் 2 பட பணிகளை தொடங்குவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 பற்றி மேலும் ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்தியன் 2 படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது. அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் கமல் - விஜய் சேதுபதி காம்போ ஒர்க் அவுட் ஆனதால், அவர்களை இந்தியன் 2 படத்திலும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் அனுப்புறாங்கனு சொன்னதால் எதிர்ப்பு! மாட்டுசாணி மாதவன் என வறுத்தெடுக்கும் Netizens