Vanitha Vijayakumar : கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை வனிதா...! காட்டுத்தீ போல் பரவும் போட்டோ - பின்னணி என்ன?
Vanitha Vijayakumar : சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை வனிதா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சேவியர் பிரிட்டோ. அவர் தயாரித்த முதல் படமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. நடிகர் விஜய்யின் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படம் ஹிட்டான பின் அடுத்தடுத்து பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்...ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் யோகி பாபுவின் பன்னிக்குட்டி..வெளியானது ரிலீஸ் டேட்!
அந்த வகையில் அவர் தயாரித்து வரும் படம் தான் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’. ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் படத்தை இயக்கிய மணி நாகராஜ் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகைகள் வனிதா, லீனா குமார், சீதா, சுஜா வருணி, என்னை அறிந்தால் பட நடிகை அனிகா, நீயா நானா கோபிநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது முதல் ஹீரோவுடன் மீனா!
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகை வனிதா கர்ப்பமாக காட்சி அளிக்கிறார். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்...அட வாரிசு-ல டபுள் ட்ரீட் இருக்காமே..குஷியில் விஜய் ரசிகர்கள்..
இப்படத்தில் அவர் பல்லவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் அனிகா, சீதா, வனிதா ஆகியோர் நிறைமாத கர்ப்பிணிகளாக இருக்கும்படியான போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் படு வைரலானது குறிப்பிடத்தக்கது.