cook with comali pugazh : நடிகர் புகழ் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. அவர் விருதுநகர் சிறையில் இருந்து வெளியே வருவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி. கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 3-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் புகழ்.

இதையும் படியுங்கள்... வலிமை, பீஸ்ட் படங்களின் வசூல் நிலவரம் என்ன?... லாபமா.. நஷ்டமா? - உண்மையை போட்டுடைத்த திருப்பூர் சுப்ரமணியம்

அதில் இவர் கொடுக்கும் எக்ஸ்பிரசன்களும், டைமிங் காமெடிகளும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதனால் புகழுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சபாபதி படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் புகழ்.

இதையும் படியுங்கள்... டாப் 10 நாயகியாகும் பிரியா பவானி..முன்னணி ஹீரோக்களுடன் இத்தனை படங்களா?

இதையடுத்து அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார். இதுதவிர விஜய் சேதுபதி, அருண்விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் தற்போது நடித்து வருகிறார். இவர் ஜூ கீப்பர் எனும் படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷிரின்கின் சாவ்லா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... மயக்க மருந்து கொடுத்து நடிகையை பலாத்காரம் செய்த விவகாரம்... மலையாள நடிகரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்

View post on Instagram

இந்நிலையில் நடிகர் புகழ் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. அவர் விருதுநகர் சிறையில் இருந்து வெளியே வருவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவர் எதற்காக சிறைக்கு சென்றார் என கேட்டு வந்தனர். தற்போது அதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடைபெற்று வந்துள்ளது. இதற்காகத் தான் புகழ் விருதுநகர் சிறைக்கு சென்றுள்ளார்.