மயக்க மருந்து கொடுத்து நடிகையை பலாத்காரம் செய்த விவகாரம்... மலையாள நடிகரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்
vijay babu arrest : படத்தில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பலாத்காரம் செய்த புகாரின் பேரில் நடிகர் விஜய் பாபுவை கேரள போலீசார் கைது செய்தனர்.
மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் விஜய் பாபு. சமீபத்தில் இவர் தயாரித்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர், இவர் மீது பாலியல் புகார் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் அந்த நடிகை பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... Poo Ramu : நடிகர் ‘பூ’ ராமுவுக்கு திடீர் மாரடைப்பு... உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி
நடிகையின் இந்த குற்றச்சாட்டை அடுத்து நடிகர் விஜய் பாபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து துபாயில் தலைமறைவாக இருந்த அவர் கடந்த ஜூன் 1-ந் தேதி இந்தியா வந்தார். இங்கு வந்ததும் அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது நடிகையின் சம்மதத்துடன் தான் உடலுறவில் ஈடுபட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படியுங்கள்... Dharsha Gupta : காட்டுக்குள் உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் ஆட்டம்போட்ட தர்ஷா குப்தா... வைரலாகும் கிளாமர் வீடியோ
இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் விஜய் பாபு கூறி இருந்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட நடிகை கடந்த வாரம் விஜய் பாபு மீது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த வழக்கை வாபஸ் பெற்றால் ஒரு கோடி ரூபாய் தருவதாக விஜய்பாபு தரப்பில் இருந்து தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக கூறி பகீர் கிளப்பினார்.
இதையும் படியுங்கள்... Nayanthara : ஹனிமூன் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட வராம... நயன்தாரா செய்த செயலால் வாயடைத்துப் போன ரசிகர்கள்
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளியிட்ட புகாரில் விஜய் பாபு தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இன்று விசாரணைக்காக ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு வந்த விஜய் பாபுவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.