- Home
- Cinema
- ரோலெக்ஸ் கேரக்டர்... லோகேஷின் முதல் சாய்ஸ் சூர்யா இல்ல.. இவர்தானாம் - வெளியானது விக்ரம் பட சீக்ரெட்
ரோலெக்ஸ் கேரக்டர்... லோகேஷின் முதல் சாய்ஸ் சூர்யா இல்ல.. இவர்தானாம் - வெளியானது விக்ரம் பட சீக்ரெட்
Rolex : விக்ரம் படத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும், கடைசி ஐந்து நிமிடத்தில் மட்டுமே வந்து அப்லாஸ் வாங்கிவிட்டார் சூர்யா.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ந் தேதி வெளியான படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷிவானி, மைனா நந்தினி, ஸ்வதிஷ்டா, காயத்ரி, செம்பன் வினோத், பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இதையும் படியுங்கள்... ராம்சரணின் RC 15 படத்துக்காக அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் பட டைட்டிலை தட்டித்தூக்க பிளான் போடும் ஷங்கர்
விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் விக்ரம் படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... Cobra movie : உதயநிதி வசம் சென்ற ‘கோப்ரா’... வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கியது ரெட் ஜெயண்ட்
விக்ரம் படத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும், கடைசி ஐந்து நிமிடத்தில் மட்டுமே வந்து அப்லாஸ் வாங்கிவிட்டார் சூர்யா. அவர் நடித்திருந்த ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மக்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினர். சூர்யாவின் நடிப்பை பார்த்து வியந்துபோன கமல், அவருக்கு ரோலெக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார். ஆனால் அந்த ரோலில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.
இதையும் படியுங்கள்... ‘இரவின் நிழல்’ படத்துக்கு தனுஷ் செய்த உதவியால் நெகிழ்ந்துபோன பார்த்திபன் - வைரலாகும் டுவிட்டர் பதிவு
அதன்படி பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜை தான் முதலில் ரோலெக்ஸ் கதாபாத்திற்கு இயக்குனர்லோகேஷ் கனகராஜ் மனதில் வைத்திருந்தாராம். இதுகுறித்து நேற்று நடைபெற்ற கடவா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிருத்விராஜிடம் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், என் பெயரை ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு சொல்லி இருப்பதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.