ராம்சரணின் RC 15 படத்துக்காக அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் பட டைட்டிலை தட்டித்தூக்க பிளான் போடும் ஷங்கர்
RC 15 Title Leaked : ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC 15 படத்தின் தலைப்பு குறித்த முக்கிய தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷங்கர், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். நடிகை அஞ்சலியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையும் படியுங்கள்... Vattam : நேரடியாக ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சிபிராஜின் வட்டம் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
இதுவரை ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் ஆகியோருடன் மட்டுமே பணியாற்றி உள்ள இயக்குனர் ஷங்கர், இப்படத்திற்காக இசையமைப்பாளர் தமன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் உதயநிதி ராஜ்ஜியம்... பெரிய படங்கள் ரெட் ஜெயண்டை நாடுவதன் பின்னணியின் இப்படி ஒரு விஷயம் இருக்கா..!
தற்காலிகமாக RC 15 என அழைக்கப்படும் இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த முக்கிய தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு சிட்டிசன் என பெயரிட படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.
இதையும் படியுங்கள்... வேகமெடுக்கும் வாரிசு..இசையமைப்பாளர் பகிர்ந்த பக்கா நியூஸ்!
அரசியல் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருவதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழு பரிந்துரை செய்கிறதாம். ஏற்கனவே சிட்டிசன் என்கிற பெயரில் நடிகர் அஜித் ஒரு படத்தில் நடித்துள்ளார். சரவண சுப்பையா இயக்கியிருந்த இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.