21 வயதில் ஹீரோ.. பின்னர் நடந்த துரதிர்ஷ்ட சம்பவம்.. ஆனா இன்று ரூ.3300 கோடி நிறுவனத்திற்கு அதிபதி..

1991 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் தளபதி திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அரவிந்த் சாமியின் வாழ்க்கை பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Actor Aravind samy who became a star at 21 but life took an unfortunate turn later founded company worth Rs 3300 crore Rya

கல்லூரியில் படித்தக் கொண்டிருந்த போது தனது பாக்கெட் மணி சம்பாதிப்பதற்காக மாடலாக இருந்தார் அரவிந்த் சாமி. அப்போது அவரை பார்த்த இயக்குனர் மணிரத்னத்தின் தனது படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார். அப்படி அவர் அறிமுகமான படம் தான் தளபதி. ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தில் மாவட்ட ஆட்சியராக அர்ஜுன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து, அவர் தனது அடுத்த படத்தில், மணிரத்னத்தின் மிகவும் பாராட்டப்பட்ட காதல் படமான ரோஜாவில் ஹீரோவாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சினிமாவில் ஆரம்ப வாழ்க்கை

1992 ஆம் ஆண்டில், நடிகர் சுரேஷ் கோபியின் டாடி என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் அரவிந்த் சாமி அறிமுகமானார். 1995 ஆம் ஆண்டு மீண்டும் மணிரத்னத்துடன் கைகோர்த்தார் அரவிந்த் சாமி. அந்த படம் தான் பாம்பே அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்தார். ரோஜாவைப் போலவே இந்தப் படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

1995 ல், சி. உமாமகேஸ்வர ராவ் இயக்கிய மௌனம் என்ற திரில்லர் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 1997 இல், ராஜீவ் மேனனின் மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்தார். இப்படம் 4 தேசிய விருதுகளையும் பெற்றது. அவர் பிரியதர்ஷனின் சாத் ரங் கே சப்னே படத்தின் மூலம், 1998 இல் இந்தியில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில்.அரவிந்த் சாமி மிகவும் விரும்பப்பட்ட இளம் நடிகர்களில் ஒருவராக மாறினார்.

Top 10 Actors: இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் லிஸ்ட் வந்தாச்சு; அதில் தமிழ் ஹீரோஸ் மட்டும் இத்தனை பேரா?

பிரச்சனைகள் மற்றும் ஓய்வு

1990களின் பிற்பகுதி வரை அரவிந்த் சாமிக்கு எல்லாம் நன்றாகவே நடந்துகொண்டிருந்தது. 1990 களின் பிற்பகுதியில், நடிகரின் பல படங்கள் தயாரிப்பு சிக்கல்களைச் சந்தித்தன. சில படங்கள் வெளியாகவேவில்லை. 1990 களில் அவர் கடைசியாக என் சுவாசே காற்றே படத்தில் நடித்தார்.

தொழிலில் கவனம்

மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த பிறகு, அரவிந்த் சாமி நடிப்பை விட்டுவிட்டு தனது தொழிலில் கவனம் செலுத்த முடிவு செய்தார். அவரது தந்தை வி.டி.சுவாமி ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். மேலும் அரவிந்த சாமியும் அமெரிக்காவில் சர்வதேச வணிகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அரவிந்த் சுவாமி வி.டி.சுவாமி அண்ட் கோ நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டு சர்வதேச வர்த்தகம் மற்றும் கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டு வந்தார். அவர் InterPro Global நிறுவனத்தின் தலைவராகவும், Prorelease India இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் ஆனார். 2005 ஆம் ஆண்டில், அரவிந்த் சாமி தனது சொந்த தொழிலை தொடங்க முடிவு செய்தார். Talent Maximusஎன்ற நிறுவனத்தைத் தொடங்கினார், இது ஊதியம் செயலாக்கம் மற்றும் தற்காலிக பணியாளர்களை நியமித்தது. இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 2022-ல் இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 3300 கோடி.

விபத்து - மீட்பு

அரவிந்த் ஸ்வாமியின் தொழில் நல்ல வளர்ச்சியை கண்ட நிலையில் அவர் மிகப்பெரிய தொழிலதிபராக மாறினார். ஆனால் 2005 ஆம் ஆண்டில், அவரின் வாழ்க்கையில் எதிர்பாராத துரதிர்ஷ்ட சம்பவம் நடந்தது. ஆம்.. அரவிந்த் சாமி ஒரு விபத்தில் சிக்கினார், இதனால் அவருக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அவரது காலில் தற்காலிக முடக்கம் ஏற்பட்டது. ஸ்வாமி அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடினார், 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்ற அவர், நடிகர் மீண்டும் வழக்கம் போல் செயல்பட தொடங்கினார்.

நடிச்ச ஒரு படம்கூட இன்னும் ரிலீஸ் ஆகல; அதற்குள் 3 மாஸ் நடிகர்களுடன் ஜோடி போட்டாச்சு! யார் இந்த மச்சக்கார நடிகை

சினிமாவில் கம்பேக் 

2013 ஆம் ஆண்டில் மணிரத்னம் தனது படத்தில் நடிக்க வைக்க மீண்டும் அரவிந்த் சாமியை அணுகினார். அதன்படி கடல் படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படத்திற்காக அவர் சுமார் 15 கிலோ எடையை குறைத்தார். அதன்பிறகு, 2015 இல், மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற அரவிந்த் சாமியின் கேரக்டர் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது, மேலும் அவருக்கு பல விருதுகளையும் பெற்றுத்தந்தது. அதன்பிறகு, நடிகர் துருவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்க சிவந்த வானம் உட்பட பல படங்களில் நடித்தார்.

2021 ஆம் ஆண்டில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் ரோலில் நடித்தார். வெங்கட் பிரபுவின் இயக்கிய கஸ்டடி படத்திலும் அவர் நடித்தார்.

அரவிந்த் சாமியின் வரவிருக்கும் படங்கள்

அரவிந்த் சாமி கடைசியாக கோகுலின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கேமியோ கிஷோர் பாண்டுரங் பெலேகரின் வரவிருக்கும் காந்தி டாக்ஸ் படத்தில் அவர் நடித்து வருகிறார்., இதில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர் மற்றும் பலர் உள்ளனர். மேலும், ‘96’ புகழ் சி.பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் மெய்யழகன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios