MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நடிச்ச ஒரு படம்கூட இன்னும் ரிலீஸ் ஆகல; அதற்குள் 3 மாஸ் நடிகர்களுடன் ஜோடி போட்டாச்சு! யார் இந்த மச்சக்கார நடிகை

நடிச்ச ஒரு படம்கூட இன்னும் ரிலீஸ் ஆகல; அதற்குள் 3 மாஸ் நடிகர்களுடன் ஜோடி போட்டாச்சு! யார் இந்த மச்சக்கார நடிகை

இளம் நடிகை ஒருவர், தான் நடித்த முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே மூன்று முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை தட்டி தூக்கி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 19 2024, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bhagyashri Borse

Bhagyashri Borse

தெலுங்கு திரையுலகம் சமீபகாலமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து பான் இந்தியா ஹிட் படங்களை கொடுத்து வந்த தெலுங்கு திரையுலகம், புதுப்புது நடிகைகளையும் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. தற்போது சென்சேஷனல் ஹீரோயின்களாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் போன்றவர்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்கிய பெருமை தெலுங்கு படங்களையே சேரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Bhagyashri Borse Movie Line up

Bhagyashri Borse Movie Line up

அந்த வரிசையில் தற்போது மற்றுமொரு புது நடிகையை களமிறக்கி இருக்கிறது டோலிவுட். அவர் பெயர் பாக்கியஸ்ரீ போர்ஸ். இதென்ன கேள்விபடாத பெயராக இருக்கு என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இனி வரும் ஆண்டுகளில் அங்கு ஒரு புயலை கிளப்ப காத்திருக்கிறார் பாக்கியஸ்ரீ. ஒருபக்க சாயலில் ராஷ்மிகா போலவும், மறுபக்க சாயலில் கீர்த்தி சுரேஷ் போலவும் இருக்கும் பாக்கியஸ்ரீ தான் தற்போது டோலிவுட்டின் டிரெண்டிங் குயின்.

இதையும் படியுங்கள்... கமலுடன் மோதும் சூர்யா; 50வது படத்தில் விஜய் சேதுபதியை போல் மாஸ் காட்டுவாரா தனுஷ்? ஜூலையில் செம சம்பவம் இருக்கு

35
Ravi Teja, Bhagyashri Borse

Ravi Teja, Bhagyashri Borse

அவர் நடித்த முதல் படம் மிஸ்டர் பச்சன். இப்படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பாக்கியஸ்ரீ. அந்த படத்தின் டிரெய்லர் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் மூன்று பிரம்மாண்ட படங்களில் நடிக்க கமிட்டாகிவிட்டார் பாக்கியஸ்ரீ. அதுமட்டுமின்றி இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோவர்களும் உள்ளனர். 

45
Vijay deverakonda, Bhagyashri Borse

Vijay deverakonda, Bhagyashri Borse

நடிகை பாக்கியஸ்ரீ கைவசம் தற்போது விஜய் தேவரகொண்டா படம் ஒன்று உள்ளது. விடி12 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் ஸ்ரீலீலா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அவரை கழட்டிவிட்டு பாக்கியஸ்ரீயை கமிட் செய்துள்ளதாம் படக்குழு.

55
Dulquer Salman, Bhagyashri Borse

Dulquer Salman, Bhagyashri Borse

இதுதவிர நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கில் நடிக்க உள்ள புதிய படத்திலும் அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இப்படத்தை ரவி என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். மேலும் நானிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பாக்கியஸ்ரீ. அப்படத்தை சுஜித் இயக்க உள்ளார். இப்படி முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே மூன்று மாஸ் நடிகர்களுடன் பாக்கியஸ்ரீ நடிக்க கமிட்டாகி உள்ளதால் அவர் தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயினாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 80 வயதிலும் ஃபிட்னஸில் கலக்கும் விஜயகுமார்! அப்பாவின் வெறித்தன ஒர்க்கவுட்டை வெளிப்படுத்திய மகள் அனிதா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved