- Home
- Gallery
- Top 10 Actors: இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் லிஸ்ட் வந்தாச்சு; அதில் தமிழ் ஹீரோஸ் மட்டும் இத்தனை பேரா?
Top 10 Actors: இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் லிஸ்ட் வந்தாச்சு; அதில் தமிழ் ஹீரோஸ் மட்டும் இத்தனை பேரா?
புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை, இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதன் முழு லிஸ்ட்டையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Shah Rukh Khan
ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான், போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள டாப் 10 நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறார். சினிமா மட்டுமின்றி தொழில்களிலும் கொடிகெட்டிப்பறக்கும் இவர், ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவருக்கு ரூ.6 ஆயிரத்து 300 கோடி சொத்துக்கள் உள்ளன,
Salman Khan
சல்மான் கான்
பாலிவுட்டில் மாஸ் நடிகராக வலம் வரும் சல்மான் கான் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். 60 வயதை நெருங்கி வரும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார். இவருக்கு 2 ஆயிரத்து 900 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Akshay Kumar
அக்ஷய் குமார்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அக்ஷய் குமார். இவர் போர்ப்ஸின் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றுள்ளார். ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நடிகர் அக்ஷய் குமாருக்கு 2 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.
Aamirkhan
ஆமீர்கான்
டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை நடிகர் ஆமீர் கான் பெற்றிருக்கிறார். பாலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவருக்கு ஆயிரத்து 892 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறதாம்.
Vijay
விஜய்
டாப் 10 நடிகர்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களும் பாலிவுட் நடிகர்களுக்கே கிடைத்த நிலையில், ஐந்தாம் இடத்தில் தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வரும் நடிகர் விஜய் தான் உள்ளார். தற்போது அரசியலிலும் நுழைந்திருக்கும் விஜய், சினிமாவை விட்டு விலகவும் உள்ளார். இவருக்கு ரூ.474 கோடி சொத்துக்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்... நடிச்ச ஒரு படம்கூட இன்னும் ரிலீஸ் ஆகல; அதற்குள் 3 மாஸ் நடிகர்களுடன் ஜோடி போட்டாச்சு! யார் இந்த மச்சக்கார நடிகை
Rajinikanth
ரஜினிகாந்த்
நடிகர் விஜய்யை தொடர்ந்து கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் தான் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறார். 70 வயதுக்கு மேலாகியும் சினிமாவில் செம்ம பிசியான நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.430 கோடி என கூறப்படுகிறது.
Allu Arjun
அல்லு அர்ஜுன்
டோலிவுட்டின் டிரெண்டிங் ஸ்டாராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தற்போது புஷ்பா 2 படத்தில் பிசியாக நடித்து வரும் அல்லு அர்ஜுன், பணக்கார நடிகர்கள் பட்டியலில் 7-ம் இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு ரூ.350 கோடி சொத்துக்கள் உள்ளதாம்.
prabhas
பிரபாஸ்
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் நடிகர் பிரபாஸுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. பான் இந்தியா அளவில் மாஸ் நடிகராக வலம் வரும் பிரபாஸ், ரூ.241 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார்.
Ajithkumar
அஜித்குமார்
பிரபாஸுக்கு அடுத்தபடியாக டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்குமார். கோலிவுட்டில் மாஸ் நடிகராக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
Kamalhaasan
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் தான் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். தற்போது 60 வயதுக்கு மேலாகும் கமல், தற்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்து செம்ம பிசியாக நடித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் இருக்குமாம்.
இதையும் படியுங்கள்... Moon Walk: 25 வருடங்களுக்கு பின்னர் AR ரஹ்மான் - பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு வித்தியாசமான டைட்டில்!