Sarathkumar : அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமீரகம் சென்றபோது அங்குள்ள ஸ்வாமிநாராயன் கோவிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தினர். இந்நிலையில் அந்த கோவிலுக்கு சென்றுள்ளார் சரத்குமார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஹிந்து கோயிலானது திறக்கப்பட்டது. புதன்கிழமையான அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அந்த கோவிலை திறந்து வைத்து தரிசனம் மேற்கொண்டார். அமீரக அரசு நன்கொடையாக அளித்த சுமார் 27 ஏக்கர் நிலத்தில் 700 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமான அந்த இந்து கோயில் கட்டப்பட்டது.
பிஏபிஎஸ் சுவாமி நாராயணன் என்கின்ற அந்த கோவிலுக்கு பல்வேறு பிரபலங்களும் நேரில் சென்று தரிசனங்களை மேற்கொண்டு வருவது அனைவரும் அமைந்தது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த முதல் இந்து கோவில் இந்திய வாஸ்து பாரம்பரிய கட்டுமான அறிவியலின்படி தான் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கோவிலின் கட்டுமானத்தில் எந்த விதமான உலோகங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அதிக அளவிலான சிமெண்ட் பயன்பாட்டை தவிர்க்க சாம்பல்களை பயன்படுத்தி உள்ளதாகவும் அந்த கோவிலின் கட்டுமான பணியில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் தனது வேட்டையன் திரைப்பட பணிகளை முடித்த பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரும் இந்த கோவிலில் சென்று தரிசனம் மேற்கொண்டார். இந்நிலையில் நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அந்த கோவிலுக்கு சென்றுள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி மூன்றாவது முறையாக சுவாமி நாராயணன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து கடவுளின் அருளை பெற்றதாகவும். இந்த கோவிலுக்கு வரும்பொழுது அமைதியான சூழலை உணர முடிகிறது என்றும் தனது பதிவில் கூறியிருக்கிறார். தனது மகன் மற்றும் மனைவி ராதிகா சரத்குமாரோடு அவர் இந்த கோவிலில் தரிசனம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது.
