Vanangaan : பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாக துவங்கிய திரைப்படம் தான் "வணங்கான்". ஆனால் படபிடிப்பு தளத்தில் பலர் முன்னிலையில் இயக்குனர் பாலா, பிரபல நடிகர் சூர்யாவை ஒருமையில் பேசியதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாத நடிகர் சூர்யா அப்படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.
சூர்யாவின் திரைவாழ்க்கையில் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்த பிதாமகன் மற்றும் நந்தா போன்ற படங்களை இயக்கியது பாலா என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இப்போது டாப் நடிகர்கள் பட்டியலில் உள்ள ஒரு நடிகரிடம் கடுமையாக நடந்துகொண்டார் பாலா என்றும் பலர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த சூழலில் கடந்த ஆண்டு இறுதியில் பிரபல நடிகர் அருண் விஜய், வணங்கான் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இப்பட பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் "வணங்கான்" படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. கடந்த சில ஆண்டுகளாகவே தான் நடிக்கும் திரைப்படங்களை மிகவும் தேர்வு செய்து நடித்து வரும் அருண் விஜய், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு தொடர்ச்சியாக பெற்று வருகிறார்.
இறுதியாக அவருடைய நடிப்பில் மிஷன் என்கின்ற திரைப்படம் வெளியானது. இந்த சூழலில் "வணங்கான்" திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருக்கிறார். சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வணங்கான் திரைப்படமும் அதே நாளில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அல்லது இந்தியன் திரைப்படம் வெளியாகி ஓரிரு வாரங்கள் கழித்து வணங்கான் திரைப்படம் வெளியாகுமா என்பதும் தெரியவில்லை. ஆகையால் விரைவில் வணங்கான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் நாம் காத்திருக்க வேண்டும்.
