- Home
- Gallery
- ஷங்கர் படத்தில் அறிமுகம்.. 2007-ல் விவாகரத்து.. இப்ப பிரபல நடிகை உடன் டேட்டிங் செய்யும் முன்னணி நடிகர்..
ஷங்கர் படத்தில் அறிமுகம்.. 2007-ல் விவாகரத்து.. இப்ப பிரபல நடிகை உடன் டேட்டிங் செய்யும் முன்னணி நடிகர்..
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, ஷங்கர் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஒருவர் தற்போது நடிகை உடன் டேட்டிங் செய்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு நடிகர் ஒருவர் தனது நடிப்பு திறமைக்காக மாநில அரசின் விருதை பெற்றார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர், ஷங்கர் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் தன்னை ஒரு முன்னணி ஹீரோவாகவும், குணச்சித்திரக் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
அவர் வேறு யாருமில்லை நடிகர் சித்தார்த் தான். ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த சித்தார்த் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதில் 100 சதவீதம் உழைப்பை போட்டு தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் சித்தார்த் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சென்னையில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த சித்தார்த், தனது பள்ளிப்படிப்பை முடித்த பின், மும்பையில் முடித்து, எம்பிஏ படித்தார். தனது தந்தையின் ஆசைக்காக மட்டுமே எம்.பி.ஏ படித்த அவருக்கு சினிமா மீது அதிக ஆர்வம் இருந்தது.
குறிப்பாக எழுத்து மற்றும் இயக்கத்தில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.. 1988 ஆம் ஆண்டு தனது தந்தையின் நெருங்கிய நண்பரும் விளம்பர இயக்குநருமான ஜெயேந்திர பஞ்சபகேசன் இயக்கிய கொசு விரட்டி விளம்பரத்திற்கு டப்பிங் செய்தததன் மூலம் ஊடக உலகில் அறிமுகமானார்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் சித்தார்த். அந்த படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் கூட அவர் நடித்தார். இயக்குனர் ஷங்கர் தனது பாய்ஸ் படத்திற்கான ஆடிஷனை நடத்திக் கொண்டிருந்தார். பிரபல கவிஞர் வாலியின் பரிந்துரையின் பேரில் ஷங்கர் சித்தார்த்தை ஆடிஷன் செய்து அவரை பாய்ஸ் படத்திற்கு தேர்வு செய்தார். இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சித்தார்த்.
தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் முக்கிய வேடத்தில் சித்தார்த் நடித்தார். விரைவில், நடிகர் பிரபுதேவா இயக்கிய நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டனா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்தார். இந்த படத்தின் மூலம் 2வது முறையாக த்ரிஷா உடன் ஜோடி சேர்ந்தார்.
தெலுங்குத் துறையில் இப்படத்தின் வெற்றி அவரை தெலுங்கு சினிமா துறையிலும் பிரபலமான முகமாக்கியது. இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, அமீர் கான் நடித்த ரங் தே பசந்தி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அவரை அணுகினார். இதன் மூலம் அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
பொம்மரில்லு, ஆட்டா, ஓய் போன்ற படங்கள் மூலம் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார் சித்தார்த். மேலும் அவை நேர்மறையான விமர்சனங்கள் அல்லது கலவையான விமர்சனங்களை சந்தித்தன. இருப்பினும், 2011 காலக்கட்டத்தில் சித்தார்த் நடிகரின் திரை வாழ்க்கை ஏற்ற இறக்கமாகத் தொடங்கியது. அவரின் சில படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. நாளடைவில் சித்தார்த் பல துணைப் படங்களில் தோன்றினார்.
இதனிடையே சித்தார்த் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினால் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மிகவும் பாராட்டப்பட்ட க்ரைம் காமெடி படமான ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்படம் விமர்சகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகளை பெற்று தந்தது.
தொடர்ந்து வசந்த்பாலன் இயக்கிய காவிய தலைவன் என்ற படத்தில் சித்தார்த் நடித்தார். இந்த படத்தில் பிருத்விராஜ், வேதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக இப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், சித்தார்த் சிறந்த நடிகருக்கான முதல் தமிழ்நாடு மாநில விருதைப் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை சித்தார்த் மேக்னா என்ற பெண்ணை 2003-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இருப்பினும் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர். இறுதியில், 2007-ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இதனிடையே மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டேட்டிங் செய்வதாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் வதந்திகள் பரவியது. இந்த ஜோடி சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதற்கான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.
நடிகர் என்பதை தாண்டி ஒரு திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் ஒரு பின்னணிப் பாடகர் என பன்முக திறமை கொண்டவராக சித்தார்த் இருக்கிறார். பல விளம்பரங்களில் நடித்து வரும் சித்தார்த், திரைப்படங்களில் அனிமேஷன் பாத்திரங்களுக்கு குரல் கொடுத்தார். சமீபத்தில் 2024 இல், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தில் டாட்டூ, ஏலியன் கேரக்டருக்கு சித்தார்த் தான் குரல் கொடுத்தார்.
இப்போது, சித்தார்த் மீண்டும் எஸ் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாரா மற்றும் மாதவனுடன் இணைந்து டெஸ்ட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்து வருகிறார்.