- Home
- Gallery
- அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை இவங்க தான்.. ராஷ்மிகா, தமன்னாலாம் கிட்ட கூட நெருங்க முடியாது..
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை இவங்க தான்.. ராஷ்மிகா, தமன்னாலாம் கிட்ட கூட நெருங்க முடியாது..
Highest Paid South Actress : அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்தியத் திரைப்படங்கள், இந்திய அளவில் வெற்றி பெற்ரு பான் இந்தியா வெற்றி படங்களாக மாறி வருகின்றன. பாகுபலி 1,2, புஷ்பா, RRR, கேஜிஎஃப் 1, 2, லியோ, 'ஜெயிலர்' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றன. இதன் மூலம் நடிகர்களின் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் தெரியுமா?
நயன்தாரா தான் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
Nayanthara
இதை தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். 20 ஆண்டுகளுக்கும் மேல் ஹீரோயினாக நடித்து வரும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகறார்.
Nayanthara
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதே போல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். அவர் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் 2023ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த பாலிவுட் படங்களில் ஒன்றாக உள்ளது. நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.5-10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதன்படி 'ஜவான்' படத்திற்காக நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மட்டுமில்லாமல் தென்னிந்திய பணக்கார நடிகையாகவும் இருக்கிறார். அவரின் சொத்துமதிப்பு 183 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
மற்ற தென்னிந்திய நடிகைகளைப் பொறுத்தவரை சமந்தா ஒரு படத்திற்கு ரூ.3.5-4 கோடி வசூலிக்கிறார். அவர் இப்போது வருண் தவானுக்கு ஜோடியாக 'சிட்டாடல்' மூலம் OTT இல் அறிமுகமாக உள்ளார், இதற்காக அவர் ரூ 10 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் OTT இல் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகையாக ஆனார்.
rashmika mandanna
ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அவர் அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2: தி ரைஸ்' படத்தில் நடிக்கிறார்.
தமன்னா பாட்டியா ஒரு படத்திற்கு ரூ.2-3 கோடி சம்பளம் வாங்குகிறார்.. ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘ஜெயிலர்’ படத்தில் நடித்ததற்காக நடிகை ரூ.3 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், அவர் அரண்மனை 4 படத்திற்காக ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூற்பபடுகிறது..