Asianet News TamilAsianet News Tamil

கார் விபத்தில் உயிரிழந்த மாடல் அழகிகளுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு! அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்

மிஸ் கேரளா (Miss Kerala) பட்டம் வென்ற மாடல் அழகிகள் இருவர் நவம்பர் 1 ஆம் தேதி கார் விபத்தில் (Car Accident) சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இவர்களுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Aansi kabeer and anjana shajan  involved with a drug gang shocking information releaved
Author
Chennai, First Published Nov 19, 2021, 7:15 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மிஸ் கேரளா (Miss Kerala) பட்டம் வென்ற மாடல் அழகிகள் இருவர் நவம்பர் 1 ஆம் தேதி கார் விபத்தில் (Car Accident) சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இவர்களுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் ஆன்சி கபீர், இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவில் நடத்த அழகிப் போட்டியில் பங்கேற்று மிஸ் கேரளா பட்டத்தை வென்றவர். இவருடன் இதே அழகிப் போட்டியில் கலந்து கொண்டு, இரண்டாவது இடத்தை பிடித்தவர் 24 வயதாகும் அஞ்சனா சாஜன். இந்த அழகி போட்டி மூலம், அறிமுகமான இவர்கள் இருவரும் பின்னர் நெருங்கிய தோழிகளாக மாறினர்.

மேலும் செய்திகள்: Esther Anil: கிளாமரில் ஹீரோயின்களையே பீட் பண்ணும் கமலின் ரீல் மகள் எஸ்தர் அனில்..! கொஞ்சம் ஓவராதான் போறாங்களோ!

 

Aansi kabeer and anjana shajan  involved with a drug gang shocking information releaved

ஒன்றாக பல மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். அந்த வகையில், ஆன்சி, அஞ்சனா  உட்பட 4 பேர் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கடந்த நவம்பர் 1 ஆம் தேதி சென்றதாக கூறப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதிகாலை ஒரு மணியளவில் இவர்கள் எர்ணாகுளம் புறவழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஏற்பட்ட விபத்தில் மாடல் அழகிகள் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்: Anikha surendran: கண் கூசும் வெய்யிலில்... நாக்கை வெளியே நீட்டி... கிக் ஏற்றும் குட்டி நயன் அனிகா!

இந்த விபத்து குறித்து எர்ணாகுளம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக  விசாரணை நடத்தி வந்த நிலையில், முதல் கட்ட விசாரணையில், இருசக்கர வானத்தில் மோதாமல் காரை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சுவர் ஒன்றில் மோதி அப்பளமாக நொறுங்கியதாகும், இதில் ஆன்சி மற்றும் அஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டது. இவர்களுடன் வந்த இருவர், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது.

Aansi kabeer and anjana shajan  involved with a drug gang shocking information releaved

இரண்டாவது கட்ட போலீசாரின் விசாரணையில், இவர்கள் இருவரும் கடைசியாக தங்கியதாக கூறப்படும் நம்பர் 18 ஹோட்டலில், போலீசார் விசாரணை செய்த போது, சிசிடிவி காட்சிகள் முழுவதுமாக அழிக்கப்பட்டது, அழகிகளை  திட்டமிட்டு கொலை செய்தார்களோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியதால்,  ஓட்டல் அதிபரிடம்  நடந்தது. அவர் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். எனவே  ராய் வயலாட் எனும் அவரை கைது செய்த போலீசார் அவருடன் சேர்த்து 5 ஓட்டல் ஊழியர்களையும் போலீசார் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

மேலும் செய்திகள்: இந்த குட்டி பாப்பா விஜய் சேதுபதி பட நடிகையா? யாருனு தெரிஞ்சா செம்ம ஷாக் ஆகிடுவீங்க!!

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக காரின் டிரைவர் அப்துல் ரகுமான் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில். திடீர் திருப்பமாக  2 மாடல் அழகிகளுடம் விபத்து என்கிற பெயரில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் இந்த விபத்து தொடர்பாக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறி இருந்த நிலையில், ஆன்சி மற்றும் அஞ்சனாவிற்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aansi kabeer and anjana shajan  involved with a drug gang shocking information releaved

விபத்துக்கு முன்னதாக அழகிகள் இருவரும் தங்கி இருந்த  No.18 விடுதியில், விஐபிகள் மட்டும் கலந்து கொள்ளும் போதை விருந்து நடைபெற்றதாகவும், இதை ஏற்பாடு செய்திருந்த சைஜு, என்பவர் தான் இந்த போதை பொருள் பார்ட்டிக்கு ஆன்ஷி கபீர், மற்றும் அஞ்சனா சாஜனை பலவந்தமாக விருந்துக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த அழைப்பை அவர்கள் முதலில் மறுத்தாலும், பின்னர் அதில் கலந்து கொண்டுள்ளனர். நேரம் ஆகிவிட்டதால் இருவரும் தங்களுடன் வந்தவர்களை அழைத்து கொண்டு அவசர அவசரமாக ஓட்டலை விட்டு வெளியேறிய போது , இவர்களை ஆடி கார் ஒன்று பின் தொடர்ந்து வந்துள்ளது.  இதனால் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்: நிறைமாத கர்ப்பிணியாக தாமரை மேல் அமர்ந்து... வயிற்றை காட்டியபடி வித்தியாசமாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை நீலிமா!

ஆன்சி மற்றும் அஞ்சனாவை இந்த போதை பொருள் பார்ட்டியில் கலந்து கொள்ள வைத்து சைஜு என்பவர், கொச்சியில் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்ததை காவல்துறை கண்டறிந்துள்ளனர். எனவே கார் விபத்தில் உயிரிழந்த இரண்டு மாடல் அழகிகளுக்கும் போதை மருத்து ஆட்களிடம் தொடர்பு இருந்ததா? என்கிற கோணத்தில் விசாரணை சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios