இந்த குட்டி பாப்பா விஜய் சேதுபதி பட நடிகையா? யாருனு தெரிஞ்சா செம்ம ஷாக் ஆகிடுவீங்க!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில, கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பட வாய்ப்பு தேடி வரும் பிரபல நடிகையின் கியூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில, கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பட வாய்ப்பு தேடி வரும் பிரபல நடிகையின் கியூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பாக்சிங் விளையாட்டு வீராங்கனையும், நடிகையுமான ரித்திகா சிங் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அவரது குழந்தை பருவ புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” திரைப்படம் முழுக்க முழுக்க பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
இந்த படத்தில் நிஜ பாக்சிங் வீராங்கனையான, ரித்திகா சிங் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததால், சினிமா பக்கமே சாய்ந்து விட்டார்.
இறுதி சுற்று படத்திற்கு பின்னர் விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை.
ஆனால் சமீபத்தில் அசோக் செல்வன் - ரித்திகா சிங் நடிப்பில் உருவான "ஓ மை கடவுளே" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து பட வாய்ப்புகளை கை பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் ரித்திகா சிங், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர், குழந்தை பருவத்தில் செம்ம கியூட்டாக இருந்த சில புகைப்படங்களை வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.